வீடு / சமையல் குறிப்பு / பச்சை சாஸில் பாஸ்தா

Photo of Pasta in green sauce by Benazer Abdul Kader at BetterButter
243
0
0.0(0)
0

பச்சை சாஸில் பாஸ்தா

Jul-03-2018
Benazer Abdul Kader
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
24 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பச்சை சாஸில் பாஸ்தா செய்முறை பற்றி

சாதாரணமாக செய்யும் பாஸ்தா சாஸில் அவகேடோ கலந்து செய்யப்பட்டது.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • கிட்டி பார்ட்டிஸ்
  • இத்தாலிய
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அவகேடோ 2
  2. மைதா மாவு 1 கப்
  3. பூண்டு 10 பல்
  4. மக்ரோனி 2 கப்
  5. பால் 1 கப் ஆரிகானோ 1/2 தே க
  6. சிக்கன் மார்பக துண்டு 1/2 துண்டு
  7. சிகப்பு குடைமிளகாய் 1/2
  8. பச்சை குடைமிளகாய் 1/2
  9. உப்பு தேவையான அளவு
  10. முழு பெப்பர் 1 தே க
  11. வெண்ணெய் 2 மே க
  12. சீஸ் 2 ஸ்லைஸ்

வழிமுறைகள்

  1. மக்ரோனியை கொதிக்கும் நீரில் பத்து நிமிடங்கள் வேக வைத்து தனியாக வடிகட்டி எடுக்கவும்
  2. பின்பு ஒரு வாணலியில் 1 மே க வெண்ணெய் ஊற்றி அதில் வட்டமாக அரிந்து வைத்திருக்கும் 5 பல் பூண்டை சேர்க்கவும்.
  3. பின்பு சிறு துண்டுகளாக வெட்டி வைத்திருக்கும் சிக்கன், உப்பு மற்றும் பொடித்த பெப்பர் போட்டு நன்கு வதக்கவும்
  4. பின்னர் இதனுடன் சிறு துண்டுகளாக வெட்டி வைத்திருக்கும் குடை மிளகாய் போட்டு வதக்கவும்
  5. வெந்ததும் வேறு பாத்திரத்தில் மாற்றி தனியாக வைக்கவும்
  6. க்ரீன் சாஸ் செய்முறை :
  7. பின்னர் அதே வாணலியில் ஒரு மேசைக்கரண்டி வெண்ணெய் விட்டு மீதம் இருக்கும் வட்டமாக அரிந்து வைத்திருக்கும் பூண்டுகளை வதக்கவும்
  8. பின்னர் இதனுடன் மைதா மாவை சேர்த்து நன்கு கிளறி சிறிது சிறிதாக பால் ஊற்றி பேஸ்ட் பதத்திற்கு கொண்டு வரவும்
  9. இடைவிடாமல் கிளறவும். அல்லது சாஸ் கெட்டி விழ வாய்ப்பு உள்ளது.
  10. நன்கு பேஸ்ட் பதத்திற்கு வந்த பிறகு அரைத்த அவகேடோ விழுதை அதனுடன் சேர்த்து நன்கு கிளறவும்
  11. இப்போது இதனுடன் சிக்கன் கலவை மற்றும் மக்ரோனி சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து நன்கு கிளறவும்
  12. கூடவே 2 ஸ்லைஸ் சீஸை போட்டு கிளறி 10 நிமிடம் கழித்து அடுப்பை ஆப் செய்யவும்
  13. மேலே ஆரிகானோ தூவி சூடாகப் பரிமாறவும்
  14. சுவையான பச்சை பாஸ்தா தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்