வீடு / சமையல் குறிப்பு / மட்டன் பிரியாணி

Photo of Mutton biryani by hajirasheed haroon at BetterButter
281
3
0.0(0)
0

மட்டன் பிரியாணி

Jul-03-2018
hajirasheed haroon
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

மட்டன் பிரியாணி செய்முறை பற்றி

பாஸ்மதி ரைஸ் மட்டன் பிரியாணி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. பாஸ்மதி அரிசி ஒரு கிலோ
  2. மட்டன் ஒரு கிலோ
  3. வெங்காயம் முக்கால் கிலோ
  4. தக்காளி அரை கிலோ
  5. இஞ்சி பூண்டு விழுது 100 கிராம்
  6. புதினா மல்லி இலை ஒரு கட்டு
  7. பச்சை மிளகாய் 8
  8. மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்
  9. மிளகாய்த் தூள் 4 தேக்கரண்டி
  10. கரம் மசாலா தூள் 2 ஸ்பூன்
  11. பட்டை ஏலக்காய் கிராம்பு பிரிஞ்சி இலை தாளித்து
  12. தயிர் அரை லிட்டர்
  13. ரெண்டு எலுமிச்சம்பழத்தின் சாறு
  14. உப்பு தேவையான அளவு
  15. தண்ணீர் தேவையான அளவு
  16. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. மட்டனை இஞ்சி பூண்டு விழுது உப்பு சேர்த்து குக்கரில் 5 விசில் விட்டு வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்
  2. பாஸ்மதி அரிசியை 30 நிமிடம் தண்ணீரில் ஊறவைத்து அரிசியுடன் சிறிது எண்ணெய் மல்லி புதினா இலை பட்டை ஏலக்காய் சேர்த்து வேக வைத்து தண்ணீர் இல்லாமல் வடிகட்டி கொள்ளவும்
  3. ஒரு ஒரு அகலமான சட்டியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை ஏலக்காய் கிராம்பு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும் வெங்காயம் நன்கு வதங்கியவுடன் அதில் இஞ்சி பூண்டு விழுது தக்காளி புதினா மல்லி இலை சேர்த்து நன்கு வதக்கவும்
  4. பிரிந்து வரும் நிலையில் மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் வேகவைத்த கறியை சேர்த்து சிறு தீயில் கறியில் மசாலா சேரும் வரை வேக விடவும்
  5. ஓரளவிற்கு மசாலா வதங்கியவுடன் அதில் வேகவைத்த பாசுமதி அரிசியை சேர்த்து நன்கு கிளறி விடவும்
  6. கேசரி பவுடரை தண்ணீரில் கரைத்து அதில் தெளித்து விட்டு மூடி 30 நிமிடம் தம்மில் வைக்கவும்
  7. சுவையான ஈசியான மட்டன் பிரியாணி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்