வீடு / சமையல் குறிப்பு / திடீர் தோசை

Photo of Instant dosai by Krishnasamy Vidya Valli at BetterButter
456
1
0.0(0)
0

திடீர் தோசை

Jul-04-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

திடீர் தோசை செய்முறை பற்றி

தோசை மாவு இல்லாதபோது அவசர காலத்தில் கைகொடுக்கும் இந்த தோசை. ஒருவருக்கு நான்கு வீதம் ஐந்து நபர்களுக்கு கொடுக்கலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • ஃப்யூஷன்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. அரிசி மாவு 11/2 கப்
  2. கோதுமை மாவு 11/2 கப்
  3. ரவை 1/4 கப் முதல் 1/2 கப்(முறுமுறு என்று வருவதற்கு)
  4. தயிர் ஒரு கப் சிலும்பல்இல்லாதவாறு கடைந்து கொள்ளவும்
  5. உளுத்தம் மாவு 2 தேக்கரண்டி
  6. கடலை மாவு 2 தேக்கரண்டி
  7. உப்பு இரண்டு தேக்கரண்டி
  8. தோசை வார்ப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்
  9. விருப்பப்பட்டால் தாளிக்க தேவையானவை
  10. எண்ணெய் அரை தேக்கரண்டி
  11. கடுகு உளுத்தம் பருப்பு தலா ஒரு தேக்கரண்டி
  12. பச்சைமிளகாய் 2
  13. கருவேப்பிலை இரண்டு ஆர்க்கு
  14. பொடியாக நறுக்கிய கொத்தமல்லி ஒரு தேக்கரண்டி
  15. மிளகு சீரகப் பொடி அரை தேக்கரண்டி
  16. இஞ்சி ஒரு சிறிய துண்டு

வழிமுறைகள்

  1. கொடுக்கப்பட்ட எல்லா மாவுகளையும் தயிர் உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக தோசைமாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்
  2. விருப்பப்பட்டால் தாளிக்க கொடுத்தவற்றைத் தாளித்து கொள்ளவும்
  3. தோசைக் கல்லில் எண்ணெய் தடவி தோசை வார்த்து எடுக்கவும்
  4. சட்னியுடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்