Photo of Gujarathi Saina by Karuna Pooja at BetterButter
2361
2
0.0(1)
0

Gujarathi Saina

Jul-04-2018
Karuna Pooja
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • குஜராத்
  • ஷாலோ ஃபிரை
  • பான் பிரை
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கடலை மாவு 1கிண்ணம்
  2. அகலமான கீரைவகை இலைகள் 4
  3. உலர்ந்த மாங்காய் வற்றல் ஒன்று
  4. சீரகத்தூள் 1/2 டீஸ்பூன்
  5. மல்லி தூள் 1/2 டீஸ்பூன்
  6. கரம் மசாலா தூள் அரை டீஸ்பூன்
  7. பூண்டு ஆறு பல்கள்
  8. பச்சை மிளகாய் 4
  9. மிளகாய்த்தூள் 1/2 டீஸ்பூன்
  10. மிளகு பொடி 1/4 டீஸ்பூன்
  11. எண்ணெய் சிறிது
  12. உப்பு தேவையான அளவு
  13. கடுகு சிறிது

வழிமுறைகள்

  1. பூண்டு பச்சை மிளகாய் உலர்ந்த மாங்காய் தூள் இவற்றை அரைக்க
  2. அரைத்த விழுதை தனியே வைக்கவும்
  3. கீரையினை முன்பும் பின்பும் நன்கு கழுவி நீரில் சுத்தம் செய்து வைக்கவும்.
  4. கீரையின் நடு புறத்தில் இருக்கும் நரம்பினை அகற்றவும்
  5. இட்லி பாத்திரத்தில் தண்ணீர் விட்டு கொதி நிலைக்கு வர வைக்கவும்
  6. இலைகளை ஒரு சமமான பரப்பின் மீது அகலமாக வைத்துக் கொள்ளவும்
  7. இந்த உணவிற்கு கடலைமாவு முக்கியம் என்பதால் அதை முதலில் பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்
  8. மாவுடன் அரைத்த பூண்டு பச்சை மிளகாய் மாங்காய் வற்றல் அரைத்த விழுதை சேர்க்க
  9. பொடி வகைகள் சேர்த்து
  10. தண்ணீர் சிறிது சிறிது விட்டு பேஸ்ட் போல மாவினை தயார் செய்யவும்
  11. படத்தில் காட்டியவாறு பேஸ்ட் போல இருக்க வேண்டும்
  12. கடலைமாவு பேஸ்ட்டை இலைகள் மீது கைகளால் பரப்பி விடவும்
  13. இன்னொரு அடுக்காக இலைகளை வைக்கவும்
  14. அகளமாக வைக்கவும்
  15. இவ்வாறு எத்தனை அடுக்கு வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்
  16. அடுக்கு அதிகமானால் பெரிய வட்டமான பட்ரா கிடைக்கும்
  17. இலையின் நுனி புறத்தை உள்புறமாக சுருட்டிக் கொண்டு வரவும்
  18. முழுவதுமாக சுருட்டி ரோல் போல வைக்கவும்
  19. சுருட்டிய ரோலை இட்லி பாத்திரத்தில் வைக்கவும்
  20. இட்லி பாத்திரத்தில் மூடி 10 நிமிடம் வேக வைக்கவும்( மிதமான தீயில்)
  21. நிறம் மாறியதும் எடுக்கலாம்.
  22. ஐந்து நிமிடம் ஆற விடவும்
  23. இளம் சூட்டில் துண்டுகளாக வெட்டவும்
  24. படத்தில் காட்டியவாறு வெட்டி எடுத்து வைக்கவும்
  25. ஒரு பான் அல்லது தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு கடுகு சேர்க்கவும்
  26. கடுகு நன்கு பொரிய விடவும்
  27. மிதமான தீயில் பட்ராக்களை கல்லில் அடுக்கவும்
  28. ஒருபுறம் நன்கு சிவக்க சுட்டெடுக்கவும்
  29. நிறம் மாறியதும் திருப்பி வைக்கவும்
  30. இரண்டு புறமும் நன்கு சிவக்க சுட்டு எடுக்கவும்.....
  31. புது பட்ராகள் தயார்
  32. தக்காளி சாஸ் உடன் சுவைக்கு ஏற்றது
  33. குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pradeep Kumar
Jul-11-2018
Pradeep Kumar   Jul-11-2018

Wow..... Super

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்