வீடு / சமையல் குறிப்பு / மைசூர் பாக்

Photo of Mysore Pak by Nancy Samson at BetterButter
631
3
0.0(0)
0

மைசூர் பாக்

Jul-05-2018
Nancy Samson
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மைசூர் பாக் செய்முறை பற்றி

வழக்கமாக மைசூர் பாகு செய்யும் முறையில், சற்று விதியாசக கடலை மாவுடன் பால் பவுடர் சேர்த்து செய்ய வேண்டும். சுவை சற்று வித்தியாசமாக இருக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • கர்நாடகா
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கடலை மாவு -1கப்
  2. பால் பவுடர் - 1 கப்
  3. நெய் - 1+1/2 கப்
  4. சர்க்கரை - 1+1/4 கப்
  5. தண்ணீர் - 1/2 கப்

வழிமுறைகள்

  1. 2 மேசைக்கரண்டி நெய் விட்டு , ஒரு அடி கனமான பாத்திரத்தில் கடலை மாவை பச்சை வாசனை போக வறுத்து எடுக்கவும்.
  2. நெய்யை உருக்கி வைத்துக்கொள்ளவும்.
  3. ஒரு குழிவான தட்டில் நெய் தடவி தயாராக வைக்கவும்.
  4. கடலை மாவு மற்றும் பால் பவுடர் இரண்டையும் ஒன்றாக சலித்து ஒரு கப்பில் போட்டு வைக்கவும்.
  5. இதில் ஒரு கப் நெய்யை விட்டு கட்டி இல்லாமல் கலந்து வைக்கவும்.
  6. ஒரு பாத்திரத்தில் சர்க்கரை சேர்த்து, அரை கப் நீர் விட்டு ஒரு கம்பி பதத்திற்கு சர்க்கரை பாகு தயார் செய்யவும்.
  7. மேலே உள்ள படத்தில் உள்ளவாறு நுரைக்கும்போது, கம்பி பதம் சரி பார்த்து, நெய்யில் கரைத்த பால் மற்றும் கடலை மாவை ஊற்றி கை விடாமல் கலக்கவும்.
  8. நெய் முழுதும் மாவு இழுத்தும், மீதமுள்ள அரை கப் நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கிளறவும்.
  9. இந்த கலவை கொப்பளித்து, கலர் வெளுத்து, நெய்யை இழுப்பதை நிறுத்தும்போது தீயை அனைத்து விடவும்.
  10. சிறிதும் தாமதிக்காமல், நெய் தடவிய தட்டில் ஊற்றி, சமன்படுத்தி செட் செய்யவும்.
  11. ஆறியதும் துண்டுகளாக வெட்டி , பரிமாறலாம். பாலபௌடர் மைசூர் பாக் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்