வீடு / சமையல் குறிப்பு / கோழி பார்ச்சா

Photo of Chicken Farcha by Bindiya Sharma at BetterButter
2664
154
4.9(0)
0

கோழி பார்ச்சா

Aug-17-2015
Bindiya Sharma
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • பண்டிகை காலம்
  • பார்சி
  • ஃபிரையிங்
  • அப்பிடைசர்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோழி- 8-10 துண்டுகள்
  2. இறைச்சிக்கு- இஞ்சி பூண்டு விழுது- 2 தேக்கரண்டி
  3. புதியதாக இடித்த கருப்பு மிளகுதூள்- 1/2 டீக்கரண்டி
  4. சிகப்பு மிளகாய்த்தூள்-1/2 டீக்கரண்டி
  5. கரம் மசாலா- 1 1/2 டீக்கரண்டி
  6. புதிதான எலுமிச்சை சாறு 2 தேக்கரண்டி
  7. சுவைக்கேற்ப உப்பு
  8. மேற்பூசுவதற்கு - 2 முட்டை
  9. ரொட்டி துகள்கள்
  10. ஆழமாக வறுப்பதற்கு எண்ணெய்
  11. உப்பு மற்றும் மிளகுத்தூள் சுவைக்காக

வழிமுறைகள்

  1. கோழிக்கறியை ஓடும் தண்ணீரில் நன்றாக கழுவி உலர்த்திக் கொள்ளவும். பெரிய கிண்ணம் ஒன்றில் இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறு, சிகப்பு மிளகாய்த்தூள், கரம் மசாலா, கழுவிய கோழிக்கறியை சேர்த்து அதேபோல் உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்துக்கொள்ளவும். கோழிக்கறி துண்டுகளை அதில் சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும்.
  2. இதை குறைந்தது அரை மணி நேரம் தனியே வைத்து விடவேண்டும் அல்லது இரவு முழுவது தனியே வைப்பது சிறந்ததாக இருக்கும்.
  3. நீங்கள் பார்ச்சா செய்ய தயாரான பின் கிண்ணத்தை வெளியே எடுத்து, அதை நன்றாக கலக்கவும்.
  4. அடிகனமான பாத்திரத்தில் ஆழமாக வறுப்பதற்கு ஏற்ற அளவிற்கு எண்ணெய் ஊற்றி நடுத்தரமாக சூடுசெய்துக் கொள்ளவும்.
  5. பெரிய கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் சுவைக்காக உப்பு மற்றும் மிளகுத்தூள் கலந்து வைத்துக் கொள்ளவும்.
  6. பெரிய தட்டு ஒன்றில் ரொட்டி துகள்களை பரப்பிக் கொள்ளவும்.
  7. எண்ணெய் நடுத்தர வெப்பத்தில்தன் உள்ளதா என்பதை பார்த்துகொள்ளவும் அதன் பின் கோழிக்கறி துண்டுகள் ஒவ்வொன்றையும் ரொட்டி துகள்களின் மேல் உருட்டி அதில் ஓட்டும்படி செய்துக் கொள்ளவும்.
  8. முட்டைக் கலவையில் கோழிக்கறியை மூழ்கடித்து பின் அதனை எண்ணெயில் விடவும்.
  9. கோழியின் உட்புறமும் வேக வேண்டும் என்பதால், எண்ணெய் மிகவும் சூடாக இருக்கக்கூடாது.
  10. கோழியை ஒவ்வொரு புறமும் பொன்னிறமாக வறுக்கவேண்டும்.
  11. பின்னர் எண்ணையை உறிஞ்சும் காகித துணியில் கோழி துண்டுகளைப போடவும், எனவே அதிகப்படியான என்னியஅது உறிஞ்சிவிடும்.
  12. உங்களுக்கு பிடித்த டிப் சாஸ், சில பிரஞ்சு பொரியல்கள், எலுமிச்சை துண்டுகளுடனோ அல்லது சாதத்துடன் கோழிக்கறியை பார்சாஸை பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்