வீடு / சமையல் குறிப்பு / கம்பு தாளிச்ச கொழுக்கட்டை

Photo of Kambu Thalicha Kozhukattai by Sowmya Sundar at BetterButter
521
0
0.0(0)
0

கம்பு தாளிச்ச கொழுக்கட்டை

Jul-06-2018
Sowmya Sundar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கம்பு தாளிச்ச கொழுக்கட்டை செய்முறை பற்றி

கம்பு மாவு ,பாசிப்பருப்பு ,தேங்காய் துருவல் சேர்த்து தாளித்து செய்த பதார்த்தம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • ஸாட்டிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கம்பு மாவு -1 கப்
  2. பாசிப்பருப்பு-2 டேபிள் ஸ்பூன்
  3. தேங்காய் துருவல்-2 டேபிள் ஸ்பூன்
  4. உப்பு தேவையான அளவு
  5. தண்ணீர் -1 1/4 கப்
  6. தாளிக்க
  7. தேங்காய் எண்ணெய்-2டேபிள் ஸ்பூன்
  8. கடுகு - 1 டீஸ்பூன்
  9. உளுத்தம்பருப்பு-1 டீஸ்பூன்
  10. கடலை பருப்பு-1 டீஸ்பூன்
  11. வெங்காயம்-1 நறுக்கியது
  12. பச்சை மிளகாய்-2 நறுக்கியது
  13. இஞ்சி-1 துண்டு நறுக்கியது
  14. கறிவேப்பிலை மல்லி இலை சிறிது
  15. பெருங்காயம்-1/4 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. கடாயில் கம்பு மாவை போட்டு வாசனை வரும் வரை வறுத்து எடுத்து கொள்ளவும். பாசிப்பருப்பை தண்ணீர் விட்டு அரை மணி நேரம் ஊற வைக்கவும்
  2. அதே கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.உப்பு சேர்த்து கொள்ளவும்
  3. தண்ணீர் கொதித்தவுடன் தேங்காய் துருவல், ஊற வைத்த பாசிப்பருப்பு மற்றும் கம்பு மாவை சேர்த்து நன்கு கிளறவும்.கெட்டியானதும் அடுப்பை அணைத்து ஆற விடவும்
  4. ஆறிய பிறகு மாவை உருண்டைகளாக உருட்டி இட்லி தட்டில் ஆவியில் பத்து நிமிடம் வரை வேக வைத்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்