வீடு / சமையல் குறிப்பு / முட்டை போண்டா

Photo of Egg bonda or egg bhaji by Fathima Beevi at BetterButter
408
1
0.0(0)
0

முட்டை போண்டா

Jul-06-2018
Fathima Beevi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

முட்டை போண்டா செய்முறை பற்றி

முட்டை போண்டா

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. வேக வைத்த முட்டை-5
  2. எண்ணெய்- பொறிப்பதற்கு
  3. மசாலாவிற்கு:
  4. வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு-1
  5. நறுக்கிய  வெங்காயம்-1
  6. துருவிய காரட் -1
  7. மிளகாய் தூள்-1/4 டீ ஸ்பூன்
  8. மஞ்சள் தூள்- 1/4 டீ ஸ்பூன்
  9. பெருங் காயத்தூள்-ஒரு சிட்டிகை
  10. உப்பு- தேவையான அளவு
  11. கரம் மசாலா தூள்-ஒரு சிட்டிகை
  12. எண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்
  13. பெருங்சீரகம்- 1/4 டீ ஸ்பூன்
  14. கருலேப்பில்லை-சிறிது
  15. கொத்தமல்லி இலை- சிறிது
  16. போண்டா மாவிற்கு:
  17. அரிசி மாவு- 2 டேபிள் ஸ்பூன்
  18. கடலை மாவு- 3 டேபிள் ஸ்பூன்
  19. உப்பு- தேவையான அளவு
  20. ஓமம் விதைகள்- 1/4 டீ ஸ்பூன்
  21. மஞ்சள் தூள் - 1/4 டீ ஸ்பூன்
  22. மிளகாய் தூள் - 1/4 டீ ஸ்பூன்
  23. கரம் மசாலா தூள்-ஒரு சிட்டிகை

வழிமுறைகள்

  1. வேக வைத்த முட்டையின் ஓடுகளை நீக்கி விட்டு, இரண்டு துண்டாக நறுக்கிக் கொள்ளவும்.
  2. முட்டையின் மஞ்சள் கருக்களை தனியாக எடுத்து வைக்கவும்
  3. போண்டா மாவிற்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக ஒரு பாத்திரத்தில் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாக கரைத்து வைக்கவும்.
  4. ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி பெருங்சீரகம், கருலேப்பில்லை சேர்த்து பின்  மசாலாவிற்கு தேவையான பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்கு வதக்கவும்.
  5. வதக்கிய மசாலாவுடன், மஞ்சள் கருக்களை சேர்த்து நன்கு மசித்து கொள்ளவும்.
  6. மசித்த கலவையை முட்டையின் நடுவில் புதைத்து வைக்கவும்.
  7. பின் ஒரு வாணலியில் பொறிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்கு காய்ந்ததும் முட்டைகளை போண்டா மாவிற்குள் நனைத்து எண்ணெயில் பொன்னிறம் ஆகும் வரை பொறித்து எடுக்கவும்.
  8. சூடான முட்டை போண்டாகளை தேங்காய் சட்னியுடன் பரிமாறலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்