வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் கட்லெட்ஸ்

Photo of Chicken cutlets by Bindiya Sharma at BetterButter
3557
201
4.4(0)
0

சிக்கன் கட்லெட்ஸ்

Aug-17-2015
Bindiya Sharma
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • தினமும்
  • பார்சி
  • அப்பிடைசர்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. துண்டு துண்டுகளாக வெட்டப்பட்ட கோழி- 500 கிராம்
  2. கரம் மசாலா - 1 டீக்கரண்டி
  3. பச்சை மிளகாய்- 2 நறுக்கப்பட்டது
  4. ரொட்டி துண்டுகள்- 2 (ஊறவைத்து மற்றும் பிழிந்து பின்பு நன்றாக பினைந்தது)
  5. முட்டை-4
  6. ரொட்டி துகள்கள் பூசுவதற்கு
  7. கொத்தமல்லி இலை- 1/2 கப் நறுக்கியது
  8. இஞ்சி பூண்டு விழுது- 1/2 டீக்கரண்டி
  9. வறுப்பதற்கு எண்ணெய்
  10. உப்பு மற்றும் கருப்பு மிளகு சுவைக்காக

வழிமுறைகள்

  1. பெரிய பாத்திரத்தில் கோழித் துண்டுகள், இஞ்சி பூண்டு விழுது, கொத்தமல்லி இலை, கரம் மசாலா மற்றும் நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்ளவும். பின் நன்றாக கலந்துக் கொள்ளவும்.
  2. இப்போது ரொட்டி துண்டு மற்றும் 2 முட்டையை சேர்த்துக் கொள்ளவும். உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து ஒரு கரண்டியால் கலந்துக் கொள்ளவும்.
  3. கிண்ணத்தில் மீதம்முள்ள 2 முட்டைகளை உடைத்து ஊற்றி அதில் உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்துக்கொளவும்.
  4. கோழி துண்டு கலவையை ஒரு தட்டையான வடிவில் செய்து அதை அடித்து வைத்த முட்டையில் நனைத்து பின்பு அதை ரொட்டி துகள்களால் பூசியப்படி மூடிவிடவும். இதே வழியில் மற்ற அனைத்து பட்டீஸ்/ கட்லெட்களையும் செய்து அவற்றை தனியாக வைத்துக் கொள்ளவும்.
  5. கட்லெட் நன்றாக வருவதற்கு 30 நிமிடம் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.
  6. கடாயில் நடுத்தர வெப்பத்தில் எண்ணெய்யை சூடுசெய்துக் கொள்ளவும். நடுத்தரமான வெப்பத்தில் கட்லெட்டின் அடிப்பகுதியில் சிறிய பதாகைகளாகவும் வெளிப்பகுதி பொன்னிறத்திலும் உட்பகுதி நன்கு வேகும் அளவிற்கும் வறுக்கவும். நீங்கள் விரும்பியபடி ஆழமாகவோ அல்லது லேசாகவும் வறுக்கலாம்.
  7. பின் கூடுதல் எண்ணெய் கசிவை பேப்பர் துண்டுக் கொண்டு வடிகட்டி சூடாக பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்