வீடு / சமையல் குறிப்பு / முட்டையில்லாத சாக்லேட் பாஸ்ட்ரி/கேக்

Photo of Eggless Chocolate Pastry / Cake by Pooja Nadkarni at BetterButter
2923
125
4.8(0)
0

முட்டையில்லாத சாக்லேட் பாஸ்ட்ரி/கேக்

May-25-2016
Pooja Nadkarni
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
35 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • கடினம்
  • அமெரிக்கன்
  • பேக்கிங்
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. 1 1/2 கப் மைதா
  2. 3/4 கப் வெள்ளை சர்க்கரைக் குருணை
  3. 1 தேக்கரண்டி வெண்ணிலா எசென்ஸ்
  4. 1/2 கப் உப்பிட்ட வெண்ணெய் அறையின் வெப்பத்தில் வைக்கப்பட்டது
  5. 1/3 கப் சூடானப் பால்
  6. 1 கப் சூடான கொதிக்கும் நீர்
  7. 1 தேக்கரண்டி பேக்கிங் பவுடர்
  8. 1/2 தேக்கரண்டி பேக்கிங் சோடா
  9. 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
  10. 5 தேக்கரண்டி உப்பிடப்பட்ட வெண்ணெய் அறையின் வெப்பத்தில் வைக்கப்பட்டது
  11. 2 கப் பொடி செய்யப்பட்ட சர்க்கரை
  12. 5 தேக்கரண்டி கொகோ பவுடர்
  13. 1 தேக்கரண்டி வெண்ணிலா எசென்ஸ்
  14. 5 தேக்கரண்டி பால்
  15. 1 தேக்கரண்டி வெண்ணிலா எசென்ஸ்

வழிமுறைகள்

  1. ஓவனை 350 டிகிரி பேரன்ஹீட்டுக்கு ப்ரீ ஹீட் செ்யதுகொள்ளவும். அனைத்துப் பொருள்களையும், மைதா மாவு, சர்க்கரை, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா போன்றவற்றை ஒரு கிண்ணத்தில் சலித்து எடுத்துக்கொள்ளவும்.
  2. வெண்ணெய் சர்க்கரையை ஒரு கிண்ணத்தில் எடுத்து எலக்ட்ரிக் பீட்டரால் நன்றாக கிரீமாகி பஞ்சுபோல் ஆகும்வரை அடித்துக்கொள்ளவும்.
  3. சூடானப் பால் சேர்த்து மேலும் சில விநாடிகள் அடித்துக்கொள்ளவும்.
  4. சலித்த உலர் பொருள்களை இந்த ஈரக் கலவையில் கரண்டியால் போட்டு மடித்து வெட்டவும். எலுமிச்சைச் சாறைச் சேர்த்துக் கலந்துகொள்ளவும்.
  5. வெந்நீரை சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும். இறுதியாக வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும்.
  6. கேக் மாவை கிரீஸ் செய்யப்பட்ட செவ்வக கேக் பாத்திரத்தில் ஊற்றவும். 35 நிமிடங்கள் அல்லது பல் குத்தும் குச்சியை மையத்தில் நுழைத்து அது சுத்தமாக வெளிவேறும்வரை பேக் செய்யவும்.
  7. ஒரு ரேக்கில் ஆறுவதற்காக எடுத்து வைத்து, இதற்கிடையில், சாக்லேட் உறைபனியை உருவாக்கிக்கொள்ளவும். சாக்லேட் பட்டர் கிரீம் ஐசிங்கிற்காகான முறை : இப்போது உறைபனி உருவாக்கத்தையோ அல்லது ஐசிங்கையோத் தயாரிப்பது எப்படி என்று பார்ப்போம். பொடி செய்யப்பட்ட சர்க்கரையையும் கொகோ பவுடரையும் ஒரு கிண்ணத்தில் சலித்துக்கொள்ளவும்.
  8. வெண்ணெயை சில விநாடிகள் அடித்து பஞ்சுபோல் பொங்கச் செய்து 1/2 பாகம் சலித்த கொகோ, சர்க்கரைக் கலவையை அதனுள் சேர்க்கவும். தேவையான அளவு பாலைச்சேர்த்து குறைவான வேகத்தில் அடித்துக்கொள்ளவும், உறைபனி கிரீமாகும்வரை.
  9. மீதமுள்ள பாதியைச் சேர்த்து தொடர்ந்து அடிக்கவும். பக்கங்களை அவ்வப்போது சுரண்டவேண்டும். பாலையும் சர்க்கரையையும் உறைபனிக்கானப் பதத்திற்கேற்ப சரிசெய்துகொள்ளவேண்டும்.
  10. உறைபனி மிக அடர்த்தியாக இருந்தால், மேலும் கொஞ்சம் பாலைச் சேர்க்கவும், அடர்த்தியாக இல்லையென்றால் மாற்றிக்கொள்ளவும். வெண்ணிலா எசென்சைச் சேர்த்து கலந்துகொள்ளவும்.
  11. ஆறவைத்த கேக்கைத் திருப்பிப்போட்டு இடையிடையே துண்டுபோட்டுக்கொள்ளவும், இரண்டாகப் பரிப்பதற்கு.
  12. நெறுக்கத்தைக் குறைப்பதற்காக நீங்கள் கேக்கை அலங்கரிக்க உத்தேசிக்குமிடத்தில் கொஞ்சம் சில்வர் ஃபால் துண்டுகளை ஒரு தட்டில் வைக்கவும். அதன் மீது ஒரு கேக் துண்டை வைத்து, கொஞ்சம் ஐசிங் அல்லது உறைபனியை மேலே வைக்கவும்.
  13. கரண்டியால் பரவச் செய்து, அடுத்த துண்டை மேலே வைக்கவும். மேலே ஐசிங்கை வைத்து நன்றாகப் பரவச் செய்யவும். கரண்டியால் மென்மையாக்கவும். உங்களுக்குப் பிடித்தவற்றால் அலங்கரிக்கவும்.
  14. வெட்டிப் பரிமாறவும். நான் எனது பேஸ்ட்ரி துண்டுகளில் பரிமாறும்போது செர்ரி வைத்து அலங்கரித்தேன்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்