வீடு / சமையல் குறிப்பு / தக்காளி கூழ் தோசை

Photo of Tomato kuzh dosai by Krishnasamy Vidya Valli at BetterButter
382
0
0.0(0)
0

தக்காளி கூழ் தோசை

Jul-07-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

தக்காளி கூழ் தோசை செய்முறை பற்றி

அரிசி மாவில் தக்காளி தேங்காய் சேர்த்து செய்யும் அருமையான தோசை இது. ஒருவருக்கு நான்கு தோசை வீதம் மூன்று நபர்களுக்கு கொடுக்கலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • ஃப்யூஷன்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. அரிசி மாவு அரை கப்
  2. உப்பு முக்கால் தேக்கரண்டி
  3. வெங்காயம் பொடியாக நறுக்கியது ஒரு மேசைக்கரண்டி
  4. கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கியது 2 தேக்கரண்டி
  5. அப்படியே அரைக்க
  6. தேங்காய்த்துருவல் 2 மேசைக்கரண்டி
  7. தக்காளி இரண்டு சிறியது
  8. பச்சைமிளகாய் 2
  9. பெருங்காயம் கால் தேக்கரண்டி
  10. தோசை வார்ப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. அரைக்க கொடுத்தவற்றை அரைத்துக் கொள்ளவும்
  2. அரைத்த விழுதுடன் அரிசி மாவு , உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்
  3. இதில் 2 கரண்டி மாவு எடுத்து 4 கரண்டி தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கூழ் போல காய்ச்சவும்
  4. கூழை ஏற்கனவே கரைத்து வைத்த மாவில் சேர்த்து நன்றாகக் கட்டி தட்டாமல் கலந்து கொள்ளவும்
  5. வெங்காயம் கொத்தமல்லி இலை மற்றும் தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து கரச்ச தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்
  6. தோசைக் கல்லில் எண்ணெய் தடவி மாவு விட்டு தோசை வார்த்து எடுக்கவும்
  7. சட்னி அல்லது சாம்பாருடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்