BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் மாவு ஸ்டீம் சாக்லேட் கேக்

Photo of Chocolate steam cake with coconut flour by Meera Ansari at BetterButter
0
4
0(0)
0

தேங்காய் மாவு ஸ்டீம் சாக்லேட் கேக்

Jul-07-2018
Meera Ansari
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் மாவு ஸ்டீம் சாக்லேட் கேக் செய்முறை பற்றி

பேக்கிங் பவுடர் இல்லாமல் தேங்காய் மாவில் சாக்லேட் கேக்

செய்முறை டாக்ஸ்

  • తేలికైనవి
  • కిట్టి పార్టీలు
  • దక్షిణ భారతీయ

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தேங்காய் மாவு 2 கப்
  2. முட்டை 3
  3. பொடித்த சர்க்கரை ஒன்றரை கப்
  4. தேங்காய் எண்ணெய் அரை கப்
  5. டைஜஸ்டிவ் பிஸ்கட் 4
  6. வெனிலா எசன்ஸ் ஒரு தேக்கரண்டி
  7. டார்க் சாக்லெட் ஒரு கப்
  8. தேன் ஒரு கப்
  9. தோல் நீக்கிய துருவிய தேங்காய் அரை கப்
  10. முந்திரி பாதாம் சிறிதளவு

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் வெந்நீர் போட்டு அதன் மேலே இன்னொரு பாத்திரத்தை வைக்கவும்
  2. டார்க் சாக்லெட்டை அதில் போட்டு உருக்கி கொள்ளவும்
  3. இன்னொரு பாத்திரத்தில் முட்டைகளை நன்கு அடித்துக் கொள்ளவும்
  4. பொடித்த சர்க்கரையை சேர்த்து மீண்டும் நன்கு அடிக்கவும்
  5. உருகிய சாக்லேட்டை முட்டையில் சேர்க்கவும்
  6. தேங்காய் எண்ணெய் சேர்க்கவும்
  7. டைஜஸ்டிவ் பிஸ்கட்டை மிக்சியில் நன்கு அடித்துக் கொள்ளவும்
  8. முட்டை கலவையுடன் சேர்க்கவும்
  9. வெண்ணிலா எசன்ஸ் சேர்க்கவும்
  10. பின்பு தேங்காய் மாவை சலித்து இந்த கலவையுடன் சேர்க்கவும்
  11. தேங்காய் மாவு சேர்த்தவுடன் கலவையை கட்டி இல்லாமல் நன்கு அடித்துக் கொள்ளவும்
  12. இட்லி குக்கரில் தண்ணீர் சேர்த்து மூடி வைக்கவும்
  13. கேக் ட்ரேயில் பட்டர் பேப்பர் வைத்து தேங்காய் எண்ணெய் தடவிக் கொள்ளவும்
  14. தேங்காய் மாவு கலவையை தட்டில் ஊற்றி அலுமினியம் ஃபாயில் பேப்பர் வைத்து மூடி கொள்ளவும்
  15. இட்லி குக்கரில் வைத்து 40 நிமிடங்கள் வேக வைக்கவும்
  16. 40 நிமிடங்கள் கழித்து இட்லி குக்கரில் இருந்து வெளியே எடுக்கவும்
  17. நன்கு ஆற விடவும்
  18. தேனை கேக்கின் மேலே ஊற்றி நன்கு பரப்பவும்
  19. துருவிய தேங்காய் முந்திரி மற்றும் பாதாமை மேலே தூவி அலங்கரிக்கவும்
  20. தேங்காய் மாவு கேக் ரெடி ஆகிவிட்டது பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்