BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / கடலைமாவு உருளைக்கிழங்கு மசாலா

Photo of Gram Flour potato Masala by Deepa Srivatsan at BetterButter
1
0
0(0)
0

கடலைமாவு உருளைக்கிழங்கு மசாலா

Jul-08-2018
Deepa Srivatsan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கடலைமாவு உருளைக்கிழங்கு மசாலா செய்முறை பற்றி

குறைவான நேரத்தில் தயாரிக்கக்கூடிய குழந்தைகளுக்கு ஏற்றது

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • ప్రతి రోజు
  • తమిళనాడు
  • ఉడికించాలి
  • వేయించేవి
  • సైడ్ డిషెస్
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. உருளைக்கிழங்கு 4
  2. பெரிய வெங்காயம் ஐந்து
  3. பச்சை மிளகாய் ஆறு
  4. இஞ்சி சிறிதளவு
  5. கறிவேப்பிலை சிறிதளவு
  6. கடலை மாவு இரண்டு கரண்டி
  7. கடுகு அரை டீஸ்பூன்
  8. உளுத்தம்பருப்பு ஒரு டீஸ்பூன்
  9. கடலைப்பருப்பு ஒரு டீஸ்பூன்
  10. பெருங்காயம் கால் டீஸ்பூன்
  11. எண்ணெய் தேவையான அளவு
  12. மஞ்சள் தூள் சிறிதளவு

வழிமுறைகள்

  1. வெங்காயம் கறிவேப்பிலை, பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை பொடிப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்
  2. உருளைக்கிழங்கை நன்றாக வேக வைத்து மசித்துக் கொள்ளவும்
  3. வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை பச்சை மிளகாய் வெங்காயம் , இஞ்சி ஆகியவற்றை போட்டு நன்றாக வதக்கவும்
  4. அதன்பின் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு சிறிது மஞ்சள் பொடி மற்றும் பெருங்காயத்தை போடவும்.
  5. கடலை மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் விட்டு கட்டியில்லாமல் கரைத்துக் கொள்ளவும்
  6. அதன் பின் வாணலியில் மசித்த உருளைக்கிழங்கை வெங்காயத்துடன் போட்டு தேவையான அளவு உப்பு சேர்க்கவும்
  7. உருளைக்கிழங்கு வெங்காயத்தையும் சேர்த்து நன்றாக வதக்கவும்
  8. அதன் பின் கரைத்து வைத்துள்ள கடலை மாவு கரைசலை அதன் மீது ஊற்றவும்
  9. நன்றாக கொதி வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்