வீடு / சமையல் குறிப்பு / சில்லி முட்டை பரோட்டா

Photo of Chilli Egg Parrota by hajirasheed haroon at BetterButter
356
2
0.0(0)
0

சில்லி முட்டை பரோட்டா

Jul-08-2018
hajirasheed haroon
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

சில்லி முட்டை பரோட்டா செய்முறை பற்றி

மைதா மாவு வெங்காயம் தக்காளி குடைமிளகாய் சேர்த்து செய்துள்ள ஒரு காரசாரமான பரோட்டா

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. மைதா மாவு 1/4 கிலோ
  2. உப்பு ஒரு சிட்டிகை
  3. தண்ணீர் ஒரு கப்
  4. சில்லி பரோட்டா செய்வதற்கு தேவையான பொருட்கள்
  5. பரோட்டா துண்டுகள் ஆறு
  6. வெங்காயம் மூன்று
  7. தக்காளி-2
  8. மிளகாய் 2
  9. மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
  10. மிளகாய்த்தூள் 1 டீஸ்பூன்
  11. கரம் மசாலா தூள் அரை டீஸ்பூன்
  12. உப்பு தேவையான அளவு
  13. பெப்பர் தூள் ஒரு ஸ்பூன்
  14. முட்டை 3
  15. தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. முதலில் பரோட்டா செய்வதற்கு ஒரு அகலமான பாத்திரத்தில் மைதா மாவு உப்பு தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்
  2. பிசைந்த மாவை ஒரு 40 நிமிடம் ஊற வைக்கவும்
  3. வெங்காயம் தக்காளி குடை மிளகாயை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்
  4. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய வெங்காயம் தக்காளி குடைமிளகாய் சேர்த்து வதக்கவும் குடைமிளகாய் நன்கு வதங்கியவுடன் அதில் உப்பு மஞ்சள் தூள் மிளகாய் தூள் கரம் மசாலா தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும் முட்டை சேர்த்து கிளறவும்
  5. வைத்துள்ள மாவை சப்பாத்தி கட்டையில் பரோட்டா வடிவத்திற்கு தேய்த்து தோசைக்கல்லில் சுட்டு எடுக்கவும்
  6. சுட்டு வைத்துள்ள பரோட்டாக்களை சிறிய சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்
  7. வெட்டிய பரோட்டா துண்டுகளை முட்டை கலவையில் சேர்த்து பெபபர் தூள் சேர்த்து சுருள கிளறவும்
  8. சுவையான சில்லி முட்டை பரோட்டா தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்