சமையல் குறிப்புக்கு தேவையான பொருட்கள்:
பாதாம் பருப்பு – 200
துருவிய தேங்காய் அல்லது தேங்காய் தூள்- 50 கிராம்,
ஏலக்காய் போடி – ஒரு சிட்டிகை
நெய் – வேண்டிய அளவு
செய்முறை >>>
பாதாம் பருப்பை….
ஊறவச்சு, உலரவச்சு, சூடான சட்டியிலே
நெய் கொஞ்சம் உருக விட்டு,
தேங்காய் துருவலோடு பொன்னிறமா வறுத்தெடுத்து
ஏலப்பொடி போட்டு, இறக்கி வச்சு ஆற விட்டு
மின்னுரலில் மையா அறைச்செடுத்து
கையில் நெய் தடவி,
லட்டு லட்டா உருட்டி வச்சேன்,,,,,,
பொழுது போகுமுன்னே,,,அத்தனையும்
போன இடம் தெரியவில்லே,,,
குறிப்பு: நீரிழிவு இல்லையென்றால் தேனும் கொஞ்சம் சேர்த்துக் கொண்டால் சுவையும் கொஞ்சம் கூடிவரும்.
இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.
மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க