வீடு / சமையல் குறிப்பு / பேரீச்சம்பழ கொழுக்கட்டை

Photo of Dates stuffed Rice Ball by Nargis Banu at BetterButter
427
2
0.0(0)
0

பேரீச்சம்பழ கொழுக்கட்டை

Jul-09-2018
Nargis Banu
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பேரீச்சம்பழ கொழுக்கட்டை செய்முறை பற்றி

சர்க்கரையோ, வெல்லமோ சேர்க்கப்படாத ஒரு இனிப்பு கொழுக்கட்டை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • ஈத்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பச்சரிசி மாவு 500 கிராம்
  2. பேரீச்சம்பழம் 200 கிராம்
  3. தேங்காய் அரை மூடி துருவியது
  4. ஏலக்காய் 4
  5. உப்பு தேவையான அளவு
  6. தண்ணீர் 21/2கப்

வழிமுறைகள்

  1. தண்ணீரை உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்
  2. பச்சரிசி மாவில் கொதிக்க வைத்த தண்ணீர் விட்டு நன்றாக பிசையவும். மேல் மாவு தயார்.
  3. பேரீச்சம்பழத்தை கொட்டை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும்.
  4. ஏலக்காய் பொடி பண்ணவும்
  5. ஒரு வாணலியில் துருவிய தேங்காய், பேரீச்சம்பழம், ஏலக்காய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பூரணம் தயார்
  6. கையில் எண்ணெய் தடவி தயார் செய்துள்ள மேல் மாவை ஒரு எலுமிச்சை அளவு உருண்டை எடுத்து கிண்ணம் போல் செய்து அதில் தயார் செய்து வைத்துள்ள பூரணத்தை நடுவில் வைத்து மூடி கொழுக்கட்டை செய்யவும். இதே போல் அனைத்து மாவையும் கொழுக்கட்டை பிடிக்கவும்.
  7. தயார் செய்து வைத்துள்ள கொழுக்கட்டைகளை இட்லி பாத்திரத்தில் ஆவியில் ஒரு 5 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.
  8. சுவையும் சத்தும் நிரம்பிய பேரீச்சம்பழ கொழுக்கட்டை தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்