வீடு / சமையல் குறிப்பு / சியா வாழை சாக்கோ மப்பின்ஸ்

Photo of Chia banana choco muffins by Subashini Krish at BetterButter
375
1
0.0(0)
0

சியா வாழை சாக்கோ மப்பின்ஸ்

Jul-09-2018
Subashini Krish
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

சியா வாழை சாக்கோ மப்பின்ஸ் செய்முறை பற்றி

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான மப்பின்சை ஆரோக்கியமான முறையில் கோதுமை மாவு, நாட்டுசர்க்கரை,செவ்வாழை சேர்த்து செய்துள்ளேன்.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • அமெரிக்கன்
  • பேக்கிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. கோதுமை மாவு ஒரு கப்
  2. பழுத்த செவ்வாழைப்பழம் 2
  3. நாட்டுச் சர்க்கரை 3/4 கப்
  4. கனோலா எண்ணெய் கால் கப்
  5. முட்டை ஒன்று
  6. சியா விதைகள் ஒரு தேக்கரண்டி
  7. வெனிலா எசன்ஸ் ஒரு தேக்கரண்டி
  8. கோக்கோ பவுடர் 2 மேசைக்கரண்டி
  9. சோடா உப்பு ஒரு தேக்கரண்டி
  10. உப்பு ஒரு சிட்டிகை

வழிமுறைகள்

  1. 180 டிகிரியில் அவனை ப்ரீஹீட் செய்யவும்.
  2. கோதுமை மாவு,கோகோ பவுடர், சோடா உப்பு, உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலந்து நன்கு சலித்து கொள்ளவும்
  3. இன்னொரு பாத்திரத்தில் வாழைப்பழத்தை நன்கு மசித்து கொள்ளவும்
  4. அதனுடன் ஒரு முட்டை,நாட்டு சர்க்கரை,வெனிலா எசன்ஸ்,சியா விதைகள், எண்ணெய் ஆகியவற்றை கலந்து நுரைக்க அடித்துக் கொள்ளவும்.
  5. சலித்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து மெதுவாக கலந்து கொள்ளவும்
  6. ஒவ்வொரு மப்பின்ஸ்அச்சிலும் அரைப்பாகத்துக்கு நிரப்பிக் கொள்ளவும்
  7. மேலே உடைத்த முந்திரி தூவி அலங்கரிக்கவும்
  8. அவனில் 180 டிகிரியில் 20 முதல் 25 நிமிடங்கள் பேக் செய்யவும்
  9. சுவையான ஆரோக்கியமான வாழைப்பழ மப்பின்ஸ் தயார்
  10. நன்கு ஆறிய பின் அச்சில் இருந்து விலக்கவும்
  11. மீதமிருந்த மாவை நான் வேறொரு அச்சிலும் தயார் செய்தேன்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்