வீடு / சமையல் குறிப்பு / ஊட்டச்சத்து நிறைந்த உடனடி அடை

Photo of INSTANT Nutritional adai by Nancy Samson at BetterButter
307
0
0.0(0)
0

ஊட்டச்சத்து நிறைந்த உடனடி அடை

Jul-10-2018
Nancy Samson
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

ஊட்டச்சத்து நிறைந்த உடனடி அடை செய்முறை பற்றி

சிலருக்கு சில வகை தானியங்கள் பருப்பு வகைகள் பிடிக்காது. அதனை அப்படியே சமைத்துக் கொடுக்கும் போது, ஒதுக்கிவிடுவார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு, அத்தகைய சத்து நிறைந்த தானிய வகைகளையும் பருப்புகளையும் அவர்களுக்கு தெரியாமலேயே உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இவ்வாறு சத்துக்கள் நிறைந்த தானியங்கள் பருப்புகள் நிறைந்த அடை செய்முறை விளக்கம் பின்வருமாறு

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • இந்திய
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. இட்லி அரிசி ஒரு கப்
  2. பச்சரிசி ஒரு கப்
  3. அரிசி ரவை அல்லது கோதுமை ரவை ஒரு கப்
  4. துவரம் பருப்பு அரை கப்
  5. கடலைப்பருப்பு அரை கப்
  6. முழு பச்சை பயிறு கால் கப்
  7. சோயா பருப்பு கால் கப்
  8. கருப்பு கொண்டைக்கடலை கால் கப்
  9. வால்நட் பருப்பு கால் கப்
  10. பாதாம் பருப்பு கால் கப்
  11. காய்ந்த மிளகாய் காரத்திற்கு ஏற்ப
  12. இஞ்சி ஒரு துண்டு
  13. பொடியாக நறுக்கிய வெங்காயம் ஒரு கப்
  14. பொடியாக நறுக்கிய கருவேப்பிலை ஒரு கை அளவு
  15. பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை ஒரு கை அளவு
  16. உப்பு தேவையான அளவு
  17. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கொடுக்கப்பட்டுள்ள அரிசி, தானியங்கள், பருப்புகள், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து எடுக்கவும்.
  2. வறுத்த அனைத்தையும் நன்றாக ஆறவைக்கவும்.
  3. ஆறிய அனைத்தையும், மெஷினில் கொடுத்து அரைத்து வைத்துக்கொள்ளவும்.
  4. இந்த மாவை கப் இல்லாமல் கிலோ கணக்கில் (1கப் - 1கிலோ), கழுவி வெயிலில் காயவைத்து, அரைத்து வைத்துக்கொள்ளுங்கள்.
  5. வால்நட் மற்றும் பாதாமை எண்ணெய் இல்லாமல் வறுத்து சேர்க்கவேண்டும்.
  6. அரைத்த மாவுடன், ரவை நறுக்கிய வெங்காயம் நறுக்கிய கொத்தமல்லித்தழை நறுக்கிய கீரை மற்றும் தேவையான உப்பு, நீர் சேர்த்து கலந்து கொள்ளவும்.
  7. மாவு நீர்த்து இல்லாமல் கொஞ்சம் திக்காக இருக்க வேண்டும் மேலே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் உள்ளவாறு இட்லி மாவு பதத்தில் இருத்தல் நல்லது.
  8. இப்பொழுது மாவு தயார், ஒரு தோசை தவாவை அடுப்பில் வைத்து சூடேற்றி எண்ணை தடவி அதில் அடை மாவை ஒரு கரண்டி ஊற்றி பரப்பவும்.
  9. பாதி வெந்ததும் அதன் மேலே தேவையான எண்ணையை பரவலாக ஊற்றி அடிப்பக்கம் நன்றாக வெந்ததும் திருப்பி போடவும்.
  10. இரண்டு பக்கமும் நன்றாக வெந்தவுடன் தட்டில் வைத்து பரிமாறலாம்.
  11. அடையுடன் சேர்த்து சாப்பிட அவியல் அல்லது காரச் சட்னி அல்லது தேங்காய் சட்னி அல்லது துருவிய வெல்லம் வைத்து பரிமாறலாம்.
  12. வழக்கமாக செய்யும் தேங்காய்ச் சட்னியுடன் சிறிது வால்நட் சேர்த்து வால்நட் தனியாகவும் கொடுக்கலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்