வீடு / சமையல் குறிப்பு / பலாப்பழ அப்பம்

Photo of Jackfruit appam by Nancy Samson at BetterButter
644
0
0.0(0)
0

பலாப்பழ அப்பம்

Jul-10-2018
Nancy Samson
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பலாப்பழ அப்பம் செய்முறை பற்றி

பலாப்பழம், அரிசி, உளுந்து மற்றும் சில பொருட்கள் வைத்து செய்யக்கூடிய மாவில் இருந்து தயாரிக்கப்படும் அப்பம். இந்த மாவில் இருந்து நீங்கள் தோசை, பணியாரம், பான்கேக்ஆகியவற்றையும் செய்யலாம்.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • அப்பிடைசர்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கோதுமை மாவு ஒரு கப்
  2. பழுத்த பலாச்சுளைகள் ஒரு கப்
  3. வெல்லம் கால் கப்
  4. துருவிய தேங்காய் 1 மேசைக்கரண்டி
  5. ஏலக்காய் 2 அல்லது 3
  6. உப்பு தேவையான அளவு
  7. நீர் தேவையான அளவு
  8. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பலாச்சுளைகளை கொட்டைகளை நீக்கி விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  2. வெல்லத்தை நன்றாக துருவி வைத்துக் கொள்ளவும் அல்லது சிறு சிறு துண்டுகளாக உடைத்து வைத்துக்கொள்ளவும்.
  3. நறுக்கி வைத்துள்ள பலாச்சுளைகள், துருவிய வெல்லம், தேங்காய் துருவல், ஏலக்காய் சேர்த்து தேவையான நீர் விட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும்.
  4. கோதுமை மாவுடன், அரைத்த விழுது , உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்து வைத்துக் கொள்ளவும்.
  5. ஒரு கடாயில் தேவையான எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் தீயை மிதமாக வைக்கவும்.
  6. சூடான எண்ணெயில் மாவை எடுத்து தேவையான அளவில் எண்ணெயில் ஊற்றி இரு பக்கங்களும் பொன்னிறமாக வெந்ததும் எடுத்து பரிமாறலாம்.
  7. பலா பழ அப்பம் தயார்.
  8. இந்த மாவை வைத்து நீங்கள் பலாப்பழம் பணியாரம் செய்யலாம். பலாப்பழ தோசை அல்லது பான் கேக் செய்யலாம்.
  9. பான் கேக் அல்லது தோசை செய்யும் போது மாவை, தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்