வீடு / சமையல் குறிப்பு / மல்டி மில்லட் டோனட்

Photo of Multi millet flour Doughnuts by saranya sathish at BetterButter
518
0
0.0(0)
0

மல்டி மில்லட் டோனட்

Jul-10-2018
saranya sathish
321 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மல்டி மில்லட் டோனட் செய்முறை பற்றி

மல்டி மில்லட் டோனட்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மல்ட்டி மில்லட் மாவு - 2 கப்
  2. வெண்ணெய் – 1/4 கப்
  3. பால் – 1/2 கப்
  4. தண்ணீர் – 1/4 கப்
  5. ஈஸ்ட் – 1 1/4 டேபிள் ஸ்பூன்
  6. சர்க்கரை – 3 டேபிள் ஸ்பூன்
  7. உப்பு – 1/2 டீஸ்பூன்
  8. எண்ணெய் – தேவையான அளவு
  9. சாக்லேட் பார் – 1
  10. சர்க்கரை பொடித்தது – தேவைக்கு

வழிமுறைகள்

  1. வெது வெதுப்பான தண்ணீரில் ஈஸ்டை கலந்து வைக்கவும்.
  2. பாலை கொதிக்க வைத்து வெண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளும். பின்னர் சர்க்கரை சேர்த்து கலந்து ஆற விடவும்.
  3. ஒரு பாத்திரத்தில் மாவு, உப்பு, பொங்கி வந்திருக்கும் ஈஸ்ட் கலவை சேர்த்து கலந்து தேவையான பால் கலவை சேர்த்து பிசையவும்.
  4. பின் ஈரத்துணியால் பாத்திரத்தை மூடி 5 மணி நேரம் வைக்கவும்.
  5. பின் உருண்டைகளாக உருட்டி சற்று கனமான சப்பாதிகளாக தேய்த்து வட்ட வடிவ கட்டர் கொண்டு கட் செய்யவும்.
  6. பின்னர் நடுவில் சற்று சிறிய கட்டர் கொண்டு கட் செய்யவும்.
  7. இதே போல் எல்லாவற்றையும் செய்து மேலே எண்ணெய் தடவி மூடி ஒரு மணி நேரம் வைக்கவும்.
  8. எண்ணெயை காய வைத்து மிதமான சூட்டில் அனைத்தையும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
  9. பின் சாக்லேட்டை சிறு துண்டுகளாக்கி ஒரு பாத்திரத்தில் சேர்த்து பின் மற்றொரு பாத்திரத்தில் நீர் வைத்து அதன் மேல் சாக்லேட் உள்ள பாத்திரத்தை அடுப்பில் வைத்து மெல்ட் செய்யவும்.
  10. இப்போது டோனட்ஸை ஒவ்வொன்றாக எடுத்து சாக்லேட்டில் டிப் செய்து எடுத்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்