வீடு / சமையல் குறிப்பு / தட்டுக்கடை சிக்கன்

Photo of thattukadai chicken by Margaret Charles at BetterButter
261
0
5.0(0)
0

தட்டுக்கடை சிக்கன்

Jul-10-2018
Margaret Charles
720 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தட்டுக்கடை சிக்கன் செய்முறை பற்றி

கேரள ஹோட்டல்களில் மிகவும் பிரபலமான சிக்கன் வகை.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • கேரளா
  • ஃபிரையிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. எலும்பில்லாத கோழிக்கறி - 500 கி
  2. இஞ்சி 75 கி
  3. பூண்டு 50 கி
  4. பச்சைமிளகாய் 5
  5. காய்ந்த மிளகாய் 6
  6. மல்லி விதை 1 தே க
  7. வெங்காயம் - 1 நீளமாக வெட்டியது
  8. பச்சை மிளகாய் - கீறியது 3
  9. கருவேப்பில்லை - சிறிதளவு
  10. மிளகு பொடி 1 தே க
  11. மஞ்சள் பொடி - 1 தே க
  12. மிளகாய் பொடி - 1 தே க
  13. உப்பு தேவைகேற்ப
  14. முட்டை 1
  15. எண்ணெய் பொறிப்பதற்கு

வழிமுறைகள்

  1. ஒரு மிக்ஸியில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் (5), காய்ந்த மிளகாய், மல்லி விதை சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
  2. கோழிக்கறியை சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் வைத்து, அரைத்த விழுது, மஞ்சள் போடி, மிளகாய் போடி, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்
  3. இதை 12-16 மணி நேரம் குளிர் சாதனப்பெட்டியில் வைக்கவும். நன்கு ஊறினால் தான் ருசி நன்கு பிடிக்கும்
  4. பின்னர் முட்டை மிளகு பொடி சேர்த்து மேலும் 2 மணி நேரம் ஊர வைக்கவும்.
  5. தேவைப்பட்டால் சிறிதளவு கடலைமாவு சேர்த்துக்கொள்ளலாம்
  6. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, கோழியை பொரித்து எடுக்கவும்.
  7. பின்னர் ஒரு சிறிய கடாயில் எண்ணெய் (தேங்காய் எண்ணெய் சேர்த்தால் கூடுதல் சுவையாக இருக்கும்), வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
  8. வெங்காயம் பொன்னிறமானதும் அதை எடுத்து பொரித்த கோழி துண்டுகள் மேல் தூவவும்.
  9. அதே பேனில் கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, கோழியுடன் சேர்க்கவும்.
  10. சுவையான தட்டுக்கடை சிக்கன் தயார்!

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்