வீடு / சமையல் குறிப்பு / உடனடி ஜிலேபி

Photo of Instant jilebi by Nancy Samson at BetterButter
713
1
0.0(0)
0

உடனடி ஜிலேபி

Jul-11-2018
Nancy Samson
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

உடனடி ஜிலேபி செய்முறை பற்றி

ஜிலேபி எல்லாருக்கும் பிரியமான இனிப்பு. இதனை உடனடியாக செய்வது எப்படி என்பதை இங்கு பகிர்ந்துள்ளேன்.

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • ஃபிரையிங்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மைதா 2 கப்
  2. கடலை மாவு 1/2 கப்
  3. சோள மாவு 1 மேசைக்கரண்டி
  4. பேக்கிங் பவுடர் 1+1/2 தேக்கரண்டி
  5. நன்கு அடித்த தயிர் 1/4 கப்
  6. மஞ்சள் நிறமி 3சொட்டுகள்
  7. வெதுவெதுப்பான நீர் 1 கப்
  8. பாகு தயாரிக்க:
  9. சர்க்கரை 1+1/2 கப்
  10. நீர் 1/2 கப்
  11. எலுமிச்சை சாறு 1/2 மேசைக்கரண்டி

வழிமுறைகள்

  1. கொடுக்கப்பட்ட பொருட்கள் அனைத்தையும் நன்றாக இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக்கொள்ளவும்.
  2. இதனை 15நிமிடங்கள் ஊற விடவும்.
  3. இதற்கிடையே ஒரு பாத்திரத்தில், சர்க்கரை, நீர் சேர்த்து ஒரு கம்பி பதத்திற்கு பாகு காய்ச்சி வைக்கவும்.
  4. இதில் 1/2 மேசைக்கரண்டி எலுமிச்சை சாறு விட்டு கலந்து விடவும்.
  5. பாகு முறியாமல் இருக்கும்.
  6. ஒரு அகலமான பாத்திரத்தில், நெய் அல்லது எண்ணெய் ஊற்றி, லேசான சூட்டில், தீயை குறைத்து மிதமான தீயில் வைத்துக்கொள்ளுங்கள்.
  7. இப்போது ஜிலேபிக்கு கலந்த மாவை, ஜிலேபி சுடுவதற்கென கடைகளில் கிடைக்கும் பாட்டிலில் ஊற்றிக் கொள்ளுங்கள்.
  8. எண்ணெய் அல்லது நெய்யில் நேரடியாக ஜிலேபி வடிவில் சுற்றி, நன்றாக பொரிந்ததும் எடுத்து பாகில் போடுங்கள்.
  9. ஜிலேபி சுற்றும் போது, எண்ணெய்க்குள் மூழ்கி பின் மேலே வர வேண்டும்.
  10. மிதமான தீயில் வையுங்கள், எண்ணெயின் சூடு அதிகம் இருந்தால் வடிவம் சரியாக வராமல் பிரிந்து, கரிந்து விடும்.
  11. எண்ணெய் சூடு குறைவாக இருந்தால், ஜிலேபி உப்பாமல், தட்டையாக இருக்கும்.
  12. எண்ணெயின் சூடு மிதமாக இருப்பது அவசியம்.
  13. பாகில் 15நிமிடங்கள் ஊறவைத்து, எடுத்து பரிமாறலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்