வீடு / சமையல் குறிப்பு / மசாலா கொழுக்கட்டை

Photo of Masala kozhukatai by suganya balusamy at BetterButter
395
1
5.0(0)
0

மசாலா கொழுக்கட்டை

Jul-11-2018
suganya balusamy
480 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

மசாலா கொழுக்கட்டை செய்முறை பற்றி

மாலை நேர சிற்றுண்டிக்கு ஏற்ற உணவு.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. காய்ந்த பட்டாணி - 1 கப்
  2. பெரிய வெங்காயம்(நறுக்கியது) - 1/2 கப்
  3. கறிவேப்பிலை - சிறிதளவு
  4. தக்காளி(நறுக்கியது) - 1/4 கப்
  5. கேரட்(துருவியது) - 1/2 கப்
  6. எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
  7. கடுகு - 1 தேக்கரண்டி
  8. கடலைப்பருப்பு- 1 தேக்கரண்டி
  9. பெருங்காயத்தூள் - சிறிதளவு
  10. கொத்துமல்லித்தழை(நறுக்கியது)- சிறிதளவு
  11. அரைப்பதற்கு:
  12. துருவிய தேங்காய் - 3 மேசைக்கரண்டி
  13. பூண்டு - 2
  14. இஞ்சி - ஒரு சிறிய துண்டு
  15. பச்சை மிளகாய் - 4
  16. கசகசா - 1/2 தேக்கரண்டி
  17. மேல்மாவுக்கு:
  18. அரிசி மாவு - 1 3/4 கப்
  19. உப்பு - 1 தேக்கரண்டி
  20. எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
  21. கொதிக்க வைத்த தண்ணீர் - 1 1/2 கப்

வழிமுறைகள்

  1. காய்ந்த பட்டாணியை 8 மணி நேரம் ஊற வைக்கவும்.குக்கரில் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி சிறிது உப்பு சேர்த்து 4-5 விசில் விடவும்.
  2. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு,கடலைப்பருப்பு மற்றும் பெருங்காயத்தூள் பொரிக்க விடவும்.
  3. பெரிய வெங்காயம்,கறிவேப்பிலை,தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.அரைக்க கொடுத்தவற்றை சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து கடாயில் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  4. வேக வைத்து மசித்த பட்டாணி,உப்பு கடாயில் சேர்த்து 5 நிமிடங்கள் வதிக்கவும். கேரட்,கொத்துமல்லித்தழை தூவி அடுப்பை அனைக்கவும்.
  5. அரிசி மாவு,எண்ணெய்,உப்பு,கொதிக்க வைத்த தண்ணீர் சிறிது சிறிதாக சேர்த்து பூரி மாவு பதத்திற்கு பிசையவும்.
  6. பட்டாணி கலவையை அரிசி மாவிற்குள் வைத்து விருப்பட்ட வடிவில் உருட்டி ஆவியில் வேக விடவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்