வீடு / சமையல் குறிப்பு / கோதுமை மாவு சக்க தேன் பிரதமன்

Photo of Wheat flour jackfruit honey pradhaman by Krishnasamy Vidya Valli at BetterButter
423
1
0.0(0)
0

கோதுமை மாவு சக்க தேன் பிரதமன்

Jul-11-2018
Krishnasamy Vidya Valli
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கோதுமை மாவு சக்க தேன் பிரதமன் செய்முறை பற்றி

கோதுமை மாவு வைத்து எளிதில் செய்யும் பாயாச வெரைட்டி இது. சக்கபழமும் தேனும் சேர்ப்பதால் கூடுதல் சுவை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • ஃப்யூஷன்
  • பாய்ளிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கோதுமை மாவு -1/4 கப்
  2. உப்பு 1 சிட்டிகை
  3. தேங்காய் துருவல்-1/4 கப்
  4. வெல்லம் -1/8 கப்
  5. தேன் -1/4 கப்
  6. பலாப்பழம்/சக்கப்பழம் -பொடியாக நறுக்கியது 2 மேஜைக்கரண்டி
  7. முந்திரி பருப்பு -5
  8. பாதாம் பருப்பு -5
  9. நெய் -2 தேக்கரண்டி
  10. ஏலப்பொடி -2 சிட்டிகை

வழிமுறைகள்

  1. தேங்காய் துருவலை சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து முறையே முதல் பால் மற்றும் இரண்டாம் பால் எடுத்துக் கொள்ளவும்
  2. கோதுமை மாவை உப்பு சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்
  3. சப்பாத்தியாக இட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்
  4. கடாயில் தண்ணீர் கொதிக்க வைத்து அதில் கோதுமை மாவு துண்டுகளை சேர்த்து 2 நிமிடம் வேக வைத்து தனியே வடிகட்டி எடுக்கவும்
  5. கடாயில் நெய் விட்டு முந்திரி பருப்பை வறுக்கவும்
  6. பலாப்பழம் சேர்த்து வதக்கவும்
  7. இரண்டாம் பால் சேர்த்து கொதிக்க விடவும்
  8. வேக வைத்த கோதுமை மாவு அடையை சேர்க்கவும்
  9. வெல்லம் சேர்த்து கொதிக்க விடவும்
  10. முதல் பால் மற்றும் ஏலப்பொடி சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்
  11. சிறிது ஆற வைத்து தேன் கலக்கவும்
  12. பாதாமை பொடியாக நறுக்கி மேலே தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்