வீடு / சமையல் குறிப்பு / கோதுமை மாவு நட்ஸ் கேக்

Photo of Wheat nuts cake by saranya sathish at BetterButter
771
1
0.0(0)
0

கோதுமை மாவு நட்ஸ் கேக்

Jul-11-2018
saranya sathish
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கோதுமை மாவு நட்ஸ் கேக் செய்முறை பற்றி

கோதுமை மாவு பாதாம் பிஸ்தா சேர்த்து செய்த கேக்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோதுமை மாவு ஒன்றரை கப்
  2. சர்க்கரை ஒரு கப்
  3. தயிர் ஒரு கப்
  4. எண்ணெய் அரை கப்
  5. பேக்கிங் பவுடர் ஒரு டீஸ்பூன்
  6. பேக்கிங் சோடா ஒரு டீஸ்பூன்
  7. உப்பு கால் டீஸ்பூன்
  8. வெனிலா எசன்ஸ் ஒரு டீஸ்பூன்
  9. பால் ஒரு டேபிள்ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் தயிர் சர்க்கரை சேர்த்து சர்க்கரை கரையும் வரை நன்றாக பீட் செய்யவும்.
  2. பின்னர் பேக்கிங் பவுடர் பேக்கிங் சோடா சேர்த்து நன்றாக கலந்து 10 நிமிடம் பாத்திரத்தை மூடி வைக்கவும்.
  3. இப்படி 10 நிமிடம் மூடி வைப்பதன் மூலம் மிகவும் மிருதுவான கேக்கை பேக் செய்ய முடியும்.
  4. 10 நிமிடம் கழித்து பாத்திரத்தை திறந்து அதற்குள் அரை கப் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும்.
  5. பின்னர் கோதுமை மாவு உப்பு சேர்த்து நன்றாக கட்டியில்லாமல் கலந்து கொள்ளவும்.
  6. பாதாம் பிஸ்தா நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
  7. பின் வெனிலா எசன்ஸ் சிறிது பால் சேர்த்து கலந்து கொள்ளவும்.
  8. ஓவனை 10 நிமிடம் ப்ரீஹீட் செய்யவும்.
  9. கேக் பாத்திரத்தில் எண்ணெய் தடவி கோதுமை மாவு தூவி டெஸ்ட் செய்து கலந்து வைத்த மாவை ஊற்றி இரண்டு முறை டப் செய்து கொள்ளவும்.
  10. பின்னர் கட் செய்து வைத்த பாதாம் பிஸ்தா சாக்கோ சிப்பை மேலே தூவி விடவும்.
  11. பின்னர் ப்ரீஹீட் செய்த அவனில் 40 நிமிடம் பேக் செய்யவும்.
  12. பின்ன நன்றாக ஆறவைத்து கட் செய்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்