வீடு / சமையல் குறிப்பு / கொழுக்கட்டை குழம்பு

Photo of Kozhukattai kuzhambu by Krishnasamy Vidya Valli at BetterButter
432
0
0.0(0)
0

கொழுக்கட்டை குழம்பு

Jul-11-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கொழுக்கட்டை குழம்பு செய்முறை பற்றி

கொழுக்கட்டை மாவு வைத்து செய்யும் வித்யாசமான குழம்பு வெரைட்டி இது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஃப்யூஷன்
  • பாய்ளிங்
  • ஸ்டீமிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கொழுக்கட்டைக்கு தேவையானவை
  2. அரிசி மாவு அரை கப்
  3. பாசிப்பருப்பு மாவு 4 தேக்கரண்டி
  4. உப்பு கால் தேக்கரண்டி
  5. காரப் பொடி கால் தேக்கரண்டி
  6. பெருங்காயம் 2 சிட்டிகை
  7. தாளிக்க தேவையானவை
  8. தேங்காய் எண்ணெய் ஒரு தேக்கரண்டி
  9. கடுகு அரை தேக்கரண்டி
  10. உளுத்தம் பருப்பு அரை தேக்கரண்டி
  11. கறிவேப்பிலை ஒரு ஆர்க்கு
  12. குழம்பிற்கு தேவையானவை
  13. புளி பாதி நெல்லிக்காய் அளவு
  14. உப்பு கால் தேக்கரண்டி
  15. மஞ்சள் பொடி 2 சிட்டிகை
  16. சாம்பார் பொடி அரை தேக்கரண்டி
  17. வெல்லம் 2 சிட்டிகை
  18. கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கியது அரை தேக்கரண்டி
  19. தாளிக்க தேவையானவை
  20. எண்ணெய் ஒரு தேக்கரண்டி
  21. கடுகு அரை தேக்கரண்டி
  22. வெந்தயம் கால் தேக்கரண்டி
  23. கறிவேப்பிலை ஒரு ஆர்க்கு
  24. சின்ன வெங்காயம் 4 பொடியாக நறுக்கிக் கொள்ளவும்

வழிமுறைகள்

  1. அரிசி மாவை கொதிக்கும் வெந்நீர் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்
  2. அதோடு பாசிப்பருப்பு மாவு பெருங்காயம் காரப்பொடி சேர்த்து கலந்து கொள்ளவும்
  3. தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்து சேர்க்கவும்
  4. எல்லாவற்றையும் நன்றாக பிசைந்து 6 உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்
  5. ஆவியில் 5 முதல் 8 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்
  6. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளிக்கவும்
  7. புளி கரைத்து சேர்த்து உப்பு மஞ்சள் பொடி சாம்பார் பொடி வெல்லம் சேர்த்து கொதிக்க விடவும்
  8. குழம்பு சிறிது வற்றியதும் வேகவைத்த கொழுக்கட்டைகளை சேர்த்து ஒரு கொதி விடவும்
  9. கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்