வீடு / சமையல் குறிப்பு / சத்துமாவு டிபன் பிளேட்(தோசை,இட்லி, லட்டு, பம்பே சாம்பார், சட்னி)

Photo of Healthymix Tiffen plate(Dosaand etc) by Balajayasri Dhamu at BetterButter
516
2
5.0(0)
0

சத்துமாவு டிபன் பிளேட்(தோசை,இட்லி, லட்டு, பம்பே சாம்பார், சட்னி)

Jul-11-2018
Balajayasri Dhamu
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சத்துமாவு டிபன் பிளேட்(தோசை,இட்லி, லட்டு, பம்பே சாம்பார், சட்னி) செய்முறை பற்றி

சத்து மாவு முதலில் ரெடி செய்து கொண்டு பிறகு அந்த மாவை பயன்படுத்தி செய்த தோசை, இட்லி, லட்டு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சத்து மாவு அரைக்க வேண்டியவை
  2. கேழ்வரகு(ராகி) 1 கிலோ
  3. சிகப்பு அரிசி 1/2கிலோ
  4. கோதுமை. 1/2கிலோ
  5. பாசிப்பயிறு 2ooகிராம்
  6. பொட்டுக்கடலை1|2கிலோ
  7. நிலக்கடலை1/2கிலோ
  8. கருப்பு உளுந்து100கிராம்
  9. கொள்ளு1/2கிலோ
  10. கொண்டக்கடலை200கிராம்
  11. கம்பு 1/2
  12. சோளம்1/2
  13. ஏலக்காய்5
  14. பாதாம்10
  15. முந்திரி10
  16. சத்துமாவுதோசை ,இட்லி
  17. இட்லி மாவு 1கப்
  18. சத்து மாவு 1கப்
  19. உப்பு தேவையான அளவு
  20. நெய் அ எண்ணெய்
  21. சத்து மாவு லட்டு
  22. சத்து மாவு1கப்
  23. நெய்3ஸ்பூன்
  24. சக்கரை அ சக்கரை பவுடர்
  25. பாம்பே சாம்பார்
  26. கடலைமாவு 3தேக்கரண்டி
  27. கடுகு 1ஸ்பூன்
  28. உளுந்து1ஸ்பூன்
  29. சோம்பு1/2ஸ்பூன்
  30. பட்டை சிறிது
  31. இஞ்சி சிறிய துண்டு
  32. பெரிய வெங்காயம்1
  33. தக்காளி2
  34. பச்சைமிளகாய் அரிந்தது 2
  35. கறிவேப்பிலை சிறிது
  36. எண்ணெய் தேவையான அளவு
  37. தேவையான அளவு உப்பு
  38. மஞ்சள் தூள்

வழிமுறைகள்

  1. முதலில் அனைத்து பொருட்களையும் சுத்தம் செய்துகொள்ள வேண்டும் கேழ்வரகு கம்பு கொள்ளுமட்டும் கழுவி வெயிலில் காயவைத்து வறுத்து கொள்ளவும்
  2. மற்றவற்றை வெயிலில் காயவைத்து வறுத்து கொள்ளவும்
  3. தனி தனியாக வறுக்கவும்
  4. சுடு ஆறியதும் இவற்றை மிஷினில் கொடுத்து அரைத்து கொள்ளவும்
  5. மாவை சலித்து பெரிய மூடி உள்ள சில்வர் பாக்ஸில் வைத்து கொள்ள வேண்டும்
  6. சிறிய பாக்ஸில் போட்டு கொண்டு தேவையான போது பயன்படுத்தி கொள்ளலாம்
  7. ஈரமான கரண்டி கையில் தொடாமல் இருந்தால் 4 முதல் 5மாதம் பயன்படுத்தி கொள்ளலாம்
  8. சத்து மாவு இட்லி தோசை
  9. இட்லி மாவில் சத்து மாவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்
  10. இட்லி தட்டில் நெய் தேய்த்து மாவை ஊற்றி 10 நிமிடம் ஆவியில் வேகவைத்து எடுக்கவும்
  11. இப்போது இட்லி ரெடி
  12. அதேமாவில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கரைத்து தோசை கல்லில் ஊற்றி எடுக்க வேண்டும்
  13. இப்போது சத்து மாவு தோசை ரெடி
  14. சத்து மாவு லட்டு
  15. கடாயில் நெய் விட்டு காய்ந்ததும் மாவு சேர்த்து நன்கு வறுத்து கொள்ளவும்
  16. பின்னர் பச்சை வாடை சென்றதும் சக்கரை சேர்த்து நன்றாக வறுக்கவும்
  17. பின்னர் சூடு ஆறியதும் உருண்டைகளாக பிடித்து கொள்ள வேண்டும்
  18. இப்போது சத்து மாவுலட்டு ரெடி
  19. பாம்பே சாம்பார்
  20. முதலில் வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுந்து சோம்பு பட்டை அனைத்தும் சேர்க்கவும்
  21. கருவேப்பிலை இஞ்சி பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்
  22. வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும்
  23. கடலை மாவை தண்ணீரில் கரைத்து ஊற்றவும்
  24. தேவையான அளவு உப்பு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கொதி வந்ததும் இறக்கவும்
  25. இப்போது சூடான பாம்பே சாம்பார் ரெடி
  26. இட்லி ,தோசை, லட்டு,சாம்பார் ,சட்னியுடன் ஆகியவற்றை தட்டில் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்