வீடு / சமையல் குறிப்பு / பட்டர் நாண் வித்அவுட் ஈஸ்ட்

Photo of Butter naan without yeast by Adaikkammai Annamalai at BetterButter
1488
2
0.0(0)
0

பட்டர் நாண் வித்அவுட் ஈஸ்ட்

Jul-11-2018
Adaikkammai Annamalai
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பட்டர் நாண் வித்அவுட் ஈஸ்ட் செய்முறை பற்றி

நாண் என்பது வேறு ஒன்றும் இல்லை. இதுவும் ஒரு வகையான சப்பாத்தி அல்லது ரொட்டி எனலாம். ஆனால் நாணின் சிறப்பு என்னவென்றால், அதனை நேரடியாக நெருப்பில் சுடுவது தான். ஆனால், அந்த நாணை நாம் வீட்டில் செய்திருக்கமாட்டோம். இப்போது அந்த நாணை வீட்டிலேயே ஈஸியாக செய்யலாம்.

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • தினமும்
  • நார்த் இந்தியன்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மைதா மாவு - 2 கப்
  2. சர்க்கரை - 1 tsp
  3. உப்பு - தேவையான அளவு
  4. எண்ணெய் - 4 tsp
  5. பேக்கிங் சோடா - 1 tsp
  6. பால் - 1/2 கப் பிசைய தேவையான அளவு
  7. உருகிய பட்டர் , மெத்தி இலை - சிறிது மேலே தடவ

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, பால், எண்ணெய் சேர்த்து கலந்து, சர்க்கரை மற்றும் நன்கு மென்மையாக பால் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைய வேண்டும்.
  2. அதை அரை மணி நேரம் உறவு சேரவிடவும், வெள்ளை தூணி போட்டு மூடவும்
  3. 1 மணி நேரம் கழித்து அதனை ஒரு முறை பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்திப் போன்று சற்று மொத்தமாக தேய்த்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்
  4. பின் அடுப்பை பற்ற வைத்து, தீயை குறைவில் வைத்து, தவாவில் போட்டு சற்று உப்பி வந்த பின் மேல் பட்டர் , மெத்தி இலை தேய்த்து வைத்துள்ளதை தடவ வேண்டும். மறுபக்கம் திருப்பி போட்டு வேக வைத்து அடுபின் மெல் நேரடியாக வைத்தி உப்பிய பின் எடுக்க வேண்டும். இதேப் போல் அனைத்து மாவையும் செய்ய வேண்டும்.
  5. இப்போது சுவையான பட்டர் நாண் ரெடி!!! இதனை கிரேவியுடன் தொட்டு சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்