வீடு / சமையல் குறிப்பு / காயல் ஸ்பெஷல் கோழியாப்பம்

Photo of Kayal Special Kozhiappam by Menaga Sathia at BetterButter
446
1
0.0(0)
0

காயல் ஸ்பெஷல் கோழியாப்பம்

Jul-11-2018
Menaga Sathia
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

காயல் ஸ்பெஷல் கோழியாப்பம் செய்முறை பற்றி

கோழியாப்பம் என்பது மைதா மாவில் செய்வது.வித்தியாசமான இந்த ரெசிபி தோழியிடம் கற்றுக்கொண்டது.காயல்பட்டிணம் இஸ்லாமியர்களின் ஸ்பெஷல் பெருநாள் சிற்றுண்டி இது.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • ஈத்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மைதா - 1+1/4 கப்
  2. சர்க்கரை -1 டீஸ்பூன்
  3. உப்பு -1/2 டீஸ்பூன்
  4. முட்டை -1
  5. நீர் -1+1/4 கப்
  6. கெட்டி தேங்காய்பால் -1+1/4 கப்
  7. மஞ்சள்தூள் -1/4 டீஸ்பூன்
  8. நெய் -1/2 டீஸ்பூன் + சுடுவதற்கு

வழிமுறைகள்

  1. பாத்திரத்தில் மைதா, உப்பு,சர்க்கரை, முட்டை, மஞ்சள்தூள் சேர்த்து கலக்கவும்.
  2. பின் தேங்காய்பால், நீர் சேர்த்து கட்டியில்லாமல் கலந்து வடிகட்டவும்.
  3. பின் நெய் சேர்க்கவும். மாவின் பதம் கொஞ்சம் நீர்க்க இருக்கவேண்டும்.
  4. நான் ஸ்டிக் கடாயை சூடு செய்து நெய் தடவவும்.ஒரு குழி கரண்டி மாவினை கடாயின் ஒரத்தில் ஊற்றி அப்படியே சுற்றினால் மாவு அனைத்து பக்கமும் சென்றுவிடும்.
  5. அப்படியே வெந்து ஓரங்களில் ஆப்பம் பிரிந்து வரும் எடுத்து தட்டில் கவிழ்த்து எடுத்தால் ஆப்பம் வந்துவிடும்.
  6. ஒரு பக்கம் மட்டும் வேகவைக்கவும், திருப்பி போடகூடாது.
  7. இப்படியே மாவினை ஆப்பங்களாக சுட்டெடுக்கவும்.
  8. இதனை சூடாக கோழி குழம்புடன் பரிமாற சுவையாக. இருக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்