Photo of Ragi adai by Kathija Lathif at BetterButter
474
1
0.0(0)
0

ராகி அடை

Jul-12-2018
Kathija Lathif
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
8 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ராகி அடை செய்முறை பற்றி

A healthy tiffin rich in iron

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ராகி மாவு 2 கப்
  2. வெங்காயம் ஒன்று
  3. பச்சைமிளகாய் 2
  4. தேங்காய் துருவல் 2 டீஸ்பூன்
  5. கறிவேப்பிலை ஒரு கைப்பிடி அளவு
  6. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வெங்காயம் கருவேப்பிலை பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும்
  2. ஒரு பேனில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி வெங்காயம் கருவேப்பிலை பச்சை மிளகாய் மிருதுவாகும்வரை வதக்கவும்
  3. ஒரு பவுலில் ராகி மாவு உப்பு வெங்காயம் சமைத்த கலவை மற்றும் தேங்காய் துருவல் நான்கையும் சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்
  4. இப்போது சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து அந்த மாவை பிசைய ஆரம்பிக்கவும் அந்த மாவு கையில் எடுத்து தட்டும் அளவிற்க்கு மிருதுவாக இருக்க வேண்டும் .
  5. இப்போது ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து நன்றாக சூடுபடுத்தவும்
  6. உங்கள் கைகளை நன்றாக தண்ணீரில் நனைத்து பின்பு ஒரு சிறிய டென்னிஸ் பந்து அளவிற்கான மாவை கையில் எடுத்து உருட்டி கொள்ளவும்
  7. பிறகு அந்த உருண்டையை தோசை கல்லின் மீது வைத்து உங்கள் கைகளாலேயே மெல்லியதாக சுற்றி பரத்தவும்
  8. இதைச் செய்யும் போது மிகவும் கவனமாக கையாள வேண்டும் அல்லது உங்கள் கைகளில் சூடு பட்டு விடும். அதனால் உள்ளங்கை படாத அளவிற்கு உங்கள் விரல்களால் அதை சுற்றி பரத்தவும்
  9. சுற்றி ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி அடுப்பை நன்கு குறைத்து வைத்து வேக விடவும்
  10. ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் அதை திருப்பி போட்டு அரை ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி அதை நன்றாக வேக விடவும்
  11. நன்றாக வெந்ததும் அதனை எடுத்து வைத்து ஏதேனும் ஒரு காரச் சட்னியுடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்