வீடு / சமையல் குறிப்பு / வெண்ணெய் புட்டு

Photo of Vennai Puttu by Jayasakthi Ekambaram at BetterButter
564
0
0.0(0)
0

வெண்ணெய் புட்டு

Jul-12-2018
Jayasakthi Ekambaram
135 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெண்ணெய் புட்டு செய்முறை பற்றி

அரிசியை ஊறவைத்து அரைத்து வெல்லத்துடன் செய்யும் பாட்டி காலத்து இனிப்பு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. இட்லி அரிசி ஒரு கப்
  2. பாகு வெல்லம் 2 கப்
  3. தண்ணீர் 4 கப்
  4. கடலைப்பருப்பு 50 கிராம்
  5. சிறு துண்டுகளாக நறுக்கிய தேங்காய் 4 ஸ்பூன்
  6. நெய் 2 ஸ்பூன்
  7. உப்பு ஒரு சிட்டிகை
  8. ஏலக்காய்த் தூள் அரை ஸ்பூன்

வழிமுறைகள்

  1. இட்லி அரிசியை இரண்டு மணி நேரம் ஊற வைத்து மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்
  2. கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி வெல்லத்தைப் கொதிக்க வைத்து பாகாக செய்யவும்
  3. வெல்லம் கரைந்ததும் வடிகட்டிக் கொள்ளவும்
  4. 4 கப் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க வைக்கவும்
  5. தண்ணீர் கொதித்ததும் அரைத்து வைத்த அரிசி மாவை அதில் ஊற்றி கைவிடாமல் கிளறவும்
  6. பத்து நிமிடம் விடாமல் கிளறவும்
  7. ஈரக் கையால் தொட்டு பார்க்கும்போது மாவு கையில் ஒட்டக்கூடாது அதுதான் சரியான பதம்
  8. கடலைப்பருப்பை வேக வைத்து அதில் சேர்க்கவும்
  9. ஏலக்காய் தூளை சேர்க்கவும்
  10. தேங்காய் துண்டுகளை சேர்க்கவும்
  11. வடிகட்டிய வெல்லத்தை ஊற்றி திரும்ப 5 நிமிடம் கிளறி கொண்டே இருக்கவும்
  12. அடுப்பிலிருந்து கீழே இறக்கவும்
  13. 4 கப் எடுத்துக் கொண்டு அதன் உள்ளே நெய்யைத் தடவவும்
  14. வேக வைத்த மாவை ஒரு ஸ்பூனில் எடுத்து எல்லா கப்களிலும் போடவும்
  15. அரைமணி நேரம் ஆறவிடவும்
  16. அரைமணி நேரம்ஆறிய பிறகு தட்டில் எல்லாவற்றையும் கவிழ்த்துக் கொள்ளவும்
  17. நன்றாக ஆறிய பிறகு சாப்பிட்டால் சுவையாக இருக்கும்
  18. இப்போதைய தலைமுறையினர் மறந்து போன பாட்டி காலத்து இனிப்பு இது
  19. மிகவும் சுவையான ஆரோக்கியமான இனிப்பாகும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்