Photo of Colourfull puttu by hajirasheed haroon at BetterButter
673
11
0.0(3)
0

Colourfull puttu

Jul-12-2018
hajirasheed haroon
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. வறுத்த அரிசி மாவு ஒரு கப்
  2. கேழ்வரகு மாவு ஒரு கப்
  3. சத்து மாவு ஒரு கப்
  4. தேங்காய் துருவல் ஒரு கப்
  5. சிற்சில சிட்டிகை உப்பு
  6. சர்க்கரை ஒரு கப்
  7. தண்ணீர் ஒரு கப்

வழிமுறைகள்

  1. முதலில் வெள்ளை நிறப் புட்டு செய்வதற்கு தேவையான பொருட்கள்
  2. ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு உப்பு தண்ணீர் சேர்த்து உதிரி உதிரியாக பிசைந்து கொள்ளவும் புட்டு பதத்திற்கு
  3. ராகி மாவு ராகி புட்டு செய்வதற்கு தேவையான பொருட்கள்
  4. ஒரு பாத்திரத்தில் ராகி மாவு உப்பு தண்ணீர் சேர்த்து புட்டு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்
  5. சத்து மாவு புட்டு செய்வதற்கு தேவையான பொருட்கள்
  6. ஒரு பாத்திரத்தில் சத்து மாவு உப்பு தண்ணீர் சேர்த்து புட்டு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்
  7. பச்சை நிற புட்டு செய்வதற்கு தேவையான பொருட்கள்
  8. கொத்துமல்லி இலையை கழுவி நைசாக சாறு எடுத்துக்கொள்ளவும் ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு கொத்தமல்லி சாறு உப்பு தண்ணீர் சேர்த்து உதிரி உதிரியாக புட்டு பதத்திற்கு பிசையவும்
  9. ரோஸ் நிறப் புட்டு செய்வதற்கு தேவையான பொருட்கள்
  10. ரோஸ் நிறப் புட்டு செய்வதற்கு பீட்ரூட்டை தோல் சீவி துருவி கொள்ளவும் ஒரு பாத்திரத்தில் வறுத்த அரிசி மாவு பீட்ரூட் துருவல் உப்பு தண்ணீர் சேர்த்து உதிரியாக புட்டு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்
  11. மஞ்சள் நிறப் புட்டு செய்வதற்கு தேவையான பொருட்கள்
  12. மஞ்சள் நிற புட்டு செய்வதற்கு கேரட்டை தோல் சீவி துருவிக் கொள்ளவும் ஒரு அகலமான பாத்திரத்தில் வறுத்த அரிசிமாவு கேரட் துருவல் உப்பு தண்ணீர் சேர்த்துப் உதிரி உதிரியாக புட்டு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்
  13. இப்பொழுது தேவையான புட்டு மாவு தயார்
  14. இப்பொழுது பிசைந்த மாவை இட்லி பாத்திரத்தில் ஒவ்வொன்றாக10 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  15. அந்த மாவில் சர்க்கரை தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறவும்
  16. இப்பொழுது ஒரு ஆறு சரிசமம் உள்ள டம்ளர்கள் எடுத்துக்கொள்ளவும் அதில் ஒவ்வொரு அடுக்காக புட்டு மாவை வைத்து அழுத்தவும்
  17. ஒரு தட்டில் டம்ளர்களை கவுத்தினால் அழகாக வரிசை வரிசையாக பூட்டுகள் கிடைக்கும்
  18. இதில் எந்த புட் கலரும் சேர்க்க வில்லை குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள் ரொம்பவே ஆரோக்கியமானது
  19. மல்லி இலைக்கு பதிலாக கீரையை அரைத்து அதன் சாரினையும் சேர்க்கலாம்
  20. மாவைஅழுத்திப் பிடிக்க வேண்டும் அதுவே புட்டிர்க்கான சரியான பதம்

மதிப்பீடு (3)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Hasina Thowfeek
Jul-15-2018
Hasina Thowfeek   Jul-15-2018

Super

Raihanathus Sahdhiyya
Jul-13-2018
Raihanathus Sahdhiyya   Jul-13-2018

Healthy puttu with wonderful colour combo

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்