வீடு / சமையல் குறிப்பு / மசாலா அடுக்கு சப்பாத்தி

Photo of Masala layer chapathi by Nancy Samson at BetterButter
297
0
0.0(0)
0

மசாலா அடுக்கு சப்பாத்தி

Jul-12-2018
Nancy Samson
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மசாலா அடுக்கு சப்பாத்தி செய்முறை பற்றி

சப்பாத்தி மாவில் மசாலா சேர்த்து, சுருட்டி செய்யும் வித்தியாசமான சுவையுள்ள சப்பாத்தி.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோதுமை மாவு - 1 கப்
  2. கேழ்வரகு மாவு -2 மேசைக்கரண்டி
  3. மைதா மாவு - 4 மேசைக்கரண்டி
  4. துருவிய கேரட், முட்டைகோஸ்- 1/4 கப்
  5. துருவிய பன்னீர் - 1/6 கப்
  6. நறுக்கிய வெங்காயம் - 1 மேசைக்கரண்டி
  7. மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
  8. மிளகு தூள் -1/4 தேக்கரண்டி
  9. சீரக தூள் -1/4 தேக்கரண்டி
  10. உப்பு - தேவையான அளவு
  11. எண்ணெய் - தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கோதுமை மாவு, கேழ்வரகு மாவு, மைதா மாவு மூன்றையும் ஒன்றாக கலந்து, தேவையான நீர், உப்பு, 2 மேசைக்கரண்டி எண்ணெய் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.
  2. ஒரு கடாயில், எண்ணெய் 2 மேசைக்கரண்டி சேர்த்து, வெங்காயத்தை வதக்கவும்.
  3. வதங்கிய வெங்காயத்துடன் துருவிய காய்கள் சேர்த்து, நன்றாக வதக்கவும்.
  4. இத்துடன் மசாலா தூள், பனீர் சேர்த்து ஈரம் போக வதக்கிக்கொள்ளவேண்டும்.
  5. இதனை நன்றாக ஆரவைக்கவும்.
  6. இப்போது பிசைந்த மாவை, சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளுங்கள்.
  7. உருட்டி வைத்த மாவை, சப்பாத்தி போல தேய்த்து, ஆறிய காய்-பனீர் மசாலாவை வைத்து சுருட்டி வைக்கவும்.
  8. இதனை வட்டமாக வளைத்து பரோட்டாவுக்கு சுற்றுவது போல சுற்றி, தேய்த்து கொள்ளுங்கள்.
  9. இதனை, சூடான தோசைக்கல்லில் போட்டு, வெண்ணெய் அல்லது எண்ணெய் தடவி இரண்டுபக்கமும் சுட்டு எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்