வீடு / சமையல் குறிப்பு / ராகிப் புட்டு

Photo of Ragi puttu by Adhi Venkat at BetterButter
360
3
0.0(0)
0

ராகிப் புட்டு

Jul-13-2018
Adhi Venkat
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ராகிப் புட்டு செய்முறை பற்றி

ராகி மாவில் செய்யும் உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கேரளா
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ராகி மாவு - 2 கப்
  2. தேங்காய்த்துருவல் - 1/2 கப்
  3. உப்பு - சிறிதளவு
  4. தண்ணீர் - தேவையான அளவு
  5. எண்ணெய் - சிறிதளவு

வழிமுறைகள்

  1. ஒரு வாணலியில் ராகி மாவை போட்டு சற்று வறுத்துக் கொள்ளவும்.
  2. அதை நன்கு ஆற விடவும்.
  3. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு அடுப்பிலேற்றவும்.
  4. கைபொறுக்கும் சூடு வந்ததும் இறக்கவும்..
  5. அதில் சிறிதளவு உப்பும், எண்ணெயும் சேர்க்கவும்.
  6. அதை சிறிது சிறிதாக ராகி மாவில் சேர்த்து விரல்களால் உதிர்க்கவும்..
  7. கட்டிகள் இல்லாமல் நன்கு உதிர்த்து, கைகளில் பிடித்துப் பார்க்கவும்..
  8. பிடிக்க வர வேண்டும், விட்டால் உதிர வேண்டும்..இதுவே புட்டுக்கான பக்குவம்.
  9. அந்த மாவை புட்டுக்குழாயில் ஒரு கையளவு போடவும்.
  10. தேங்காய்த்துருவல் சிறிதளவு போடவும்..
  11. மீண்டும் மாவு போடவும்..
  12. இப்படி மாற்றி மாற்றிப் போட்டு பதினைந்து நிமிடங்கள் ஆவியில் வைக்கவும்..
  13. சுவையான புட்டு தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்