வீடு / சமையல் குறிப்பு / மட்டன் பன்னீர் கட்லெட்

Photo of Mutton paneer cutlet by Meera Ansari at BetterButter
0
1
0(0)
0

மட்டன் பன்னீர் கட்லெட்

Jul-13-2018
Meera Ansari
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

மட்டன் பன்னீர் கட்லெட் செய்முறை பற்றி

ஆரோக்கியமான கட்லெட்

செய்முறை டாக்ஸ்

 • నాన్ వెజ్
 • వేయించేవి
 • తక్కువ క్యాలరీలు

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

 1. மட்டன் 200 கிராம்
 2. பன்னீர் 100 கிராம்
 3. உருளைக்கிழங்கு 2
 4. வெங்காயத்தாள் அரை கப்
 5. இஞ்சி பூண்டு விழுது 2 டேபிள் ஸ்பூன்
 6. மிளகாய்த்தூள் 2 டேபிள்ஸ்பூன்
 7. மஞ்சள்தூள் அரை டீஸ்பூன்
 8. சாட் மசாலா ஒரு மேசைக்கரண்டி
 9. சீரகப் பொடி அரை மேசைக்கரண்டி
 10. மிளகுத்தூள் சிறிதளவு
 11. உப்பு சிறிதளவு
 12. புதினா மல்லி இலை சிறிதளவு
 13. எண்ணெய் ஒரு கப்
 14. அரிசி மாவு அரை கப்
 15. மைதா மாவு ஒரு டேபிள்ஸ்பூன்
 16. கார்ன் ஃப்ளார் மாவு ஒரு டேபிள்ஸ்பூன்
 17. ப்ரெட் க்ரம்ப்ஸ் ஒரு கப்

வழிமுறைகள்

 1. முதலில் மட்டனை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்
 2. நருக்கிய மட்டனுடன் மிளகாய்த்தூள் இஞ்சி பூண்டு விழுது சிறிதளவு உப்பு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வேக விடவும்
 3. உருளைக்கிழங்கை நன்கு வேக விடவும்
 4. மட்டன் வெந்தவுடன் நன்கு மசிக்கவும்
 5. மட்டனுடன் உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு மசிக்கவும்
 6. பிறகு பன்னீர் சேர்த்து நன்கு கை விட்டு பிசையவும்
 7. பிறகு மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் உப்பு சீரகப்பொடி சாட் மசாலா தூள் சேர்க்கவும்
 8. இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்
 9. கரம் மசாலா சேர்க்கவும்
 10. பிரட் க்ரம்ஸ் சிறிதளவு சேர்க்கவும்
 11. அரிசி மாவை சேர்க்கவும்
 12. வெங்காயத்தாள் மல்லி புதினா இலைகளை சேர்க்கவும்
 13. நான் ஸ்டிகில் பொரிப்பதற்கான எண்ணையை காய விடவும்
 14. ஒரு சிறிய பாத்திரத்தில் மைதா மாவு கார்ன் ஃப்ளார் மாவு தண்ணீர் சேர்த்து பேஸ்டாக்கி கொள்ளவும்
 15. கார்ன் ஃப்ளார் மாவில் உப்பு மிளகுத்தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்
 16. மட்டன் கலவையை சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும்
 17. ஒவ்வொரு உருண்டையையும் கான்பிளவர் மாவு பேஸ்டில் முக்கி எடுக்கவும்
 18. ப்ரெட் க்ரம்ஸில் பிரட்டி எடுத்து தனியே வைக்கவும்
 19. எண்ணெய் நன்கு காய்ந்தவுடன் ஒவ்வொரு உருண்டையாக பொரித்து எடுக்கவும்
 20. கெட்சப்புடன் பரிமாறி சுவைக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்