வீடு / சமையல் குறிப்பு / வெல்ல பாதுஷா

Photo of Jaggery Badhusha by Sowmya Sundar at BetterButter
421
2
0.0(0)
0

வெல்ல பாதுஷா

Jul-13-2018
Sowmya Sundar
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

வெல்ல பாதுஷா செய்முறை பற்றி

பாதுஷா மைதா மாவு மற்றும் சர்க்கரை பாகு பயன்படுத்தி செய்வார்கள்.இது கோதுமை மாவை பயன்படுத்தி வெல்ல பாகில் போட்டு செய்த பாதுஷா.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கோதுமை மாவு-2 கப்
  2. நெய்/ வெண்ணெய் - 1/4 கப்
  3. எண்ணெய்-1/8 கப்
  4. பேக்கிங் சோடா-1/4 டீஸ்பூன்
  5. தயிர்-2 டேபிள் ஸ்பூன்
  6. எண்ணெய் பொரிக்க
  7. வெல்லம் -1 கப்
  8. ஏலக்காய் பொடி-1/2 டீஸ்பூன்
  9. முந்திரி பாதாம் பருப்பு-6

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் நெய், எண்ணெய், தயிர் ,பேக்கிங் சோடா மற்றும் சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
  2. பின்னர் அதில் கோதுமை மாவு மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு சாஃப்ட்டாக பிசைந்து கொள்ளவும்
  3. மாவை உருண்டைகளாக உருட்டி அதன் நடுவில் சிறிய குழி போன்று செய்து கொள்ளவும்
  4. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பாதுஷாவை மிதமான தீயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.சிம்மில் வைத்து பொரித்தால் தான் உள்ளே வேகும்.
  5. மற்றொரு பாத்திரத்தில் வெல்லம் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டி கொண்டு மறுபடியும் ஒற்றை கம்பி பதம் வரும் வரை கொதிக்க விடவும். அடுப்பை அணைத்து ஏலக்காய் பொடி சேர்த்து கலக்கவும்
  6. பாதாம் பருப்பு மற்றும் முந்திரி பருப்பை சேர்த்து மிக்ஸியில் பொடி செய்து கொள்ளவும்
  7. வேக வைத்த பாதுஷாவை பாகில் சேர்த்து ஊற வைக்கவும்
  8. பின்னர் எடுத்து பாதாம் முந்திரி பொடி தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்