வீடு / சமையல் குறிப்பு / உளுந்து கச்சோரி

Photo of Urad dal Kachori by Menaga Sathia at BetterButter
0
2
0(0)
0

உளுந்து கச்சோரி

Jul-13-2018
Menaga Sathia
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

உளுந்து கச்சோரி செய்முறை பற்றி

கச்சோரியினை மைதாவில் தான் செய்வாங்க,இதில் பாதிக்கு பாதி மைதா,கோதுமை மாவு சேர்த்து செய்துருக்கேன்.இது நம்ம ஊரு ஸ்டப்ட் பூரி .

செய்முறை டாக்ஸ்

 • శాఖాహారం
 • మీడియం/మధ్యస్థ
 • ఉత్తర భారతీయ
 • చిరు తిండి
 • వేగన్

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

 1. மைதா -1 கப்
 2. கோதுமைமாவு -1 கப்
 3. உப்பு -1டீஸ்பூன்
 4. பேக்கிங்சோடா -1/2 டீஸ்பூன்
 5. ஓமம் -1/2 டீஸ்பூன்
 6. எண்ணெய் -பொரிக்க+4 டேபிள்ஸ்பூன்
 7. நீர் -1/2 கப்+ 2 டேபிள்ஸ்பூன்
 8. பூரணம் செய்ய :
 9. வெள்ளை உளுந்து - 1 கப்
 10. கடலைமாவு -1/2 கப்
 11. சோம்பு -1/2 டீஸ்பூன்
 12. கரம் மசாலா -1/4 டீஸ்பூன்
 13. தனியாதூள் -1 டீஸ்பூன்
 14. மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்
 15. கடுகு -1/2 டீஸ்பூன்
 16. ஆம்சூர் பொடி -3/4 டீஸ்பூன்
 17. உப்பு -தேவைக்கு
 18. பெருங்காயபொடி -1/4 டீஸ்பூன்
 19. வரமிளகாய்தூள் -1 டீஸ்பூன்
 20. எண்ணெய் -1 டேபிள்ஸ்பூன்

வழிமுறைகள்

 1. ஒரு பாத்திரத்தில் மைதா,உப்பு,கோதுமை மாவு,பேக்கிங்சோடா,ஒமம், 4 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கலந்த பின் நீர் சேர்த்து கெட்டியாக சப்பாத்தி மாவு போல பிசைந்து 1/2 மணிநேரம் வைக்கவும்.
 2. ஸ்டப்பிங் செய்ய: உளுந்தினை கழுவி 1/2 மணிநேரம் ஊறவைத்து நீரை வடிக்கவும்.
 3. பின் பாத்திரத்தில் நீர் ஊற்றி உப்பு, சேர்த்து குழையாமல் வேகவைத்து நீரை வடிக்கவும்
 4. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,சோம்பு,பெருங்காயபொடி சேர்த்து தாளித்து வேகவைத்த பருப்பினை சேர்க்கவும்.
 5. பின் அனைத்து மசாலா மற்றும் கடலைமாவு சேர்த்து பச்சைவாசனை போக கிளறவும். கடைசியாக ஆம்சூர்பொடி இறக்கி நன்கு ஆறவைக்கவும்.
 6. மாவினை எலுமிச்சையளவு சம உருண்டைகளாக போடவும். ஒரு உருண்டையை எடுத்து உருட்டவும்.
 7. நடுவில் மொத்தமாகவும்,ஓரங்களில் மெலிதாக உருட்டவும், அப்போது தான் பூரணம் வெளியே வராது.
 8. 1டேபிள்ஸ்பூன் பூரணத்தை வைக்கவும்
 9. ஓரங்களை அப்படியே மேல் நோக்கி உருண்டையாக்கி,இப்போது உள்ளங்கையால் அப்படியே வட்டமாக அமுக்கிவிடவும்.
 10. இப்படியே அனைத்தும் செய்த பின் எண்ணெயை காயவைக்கவும்.
 11. மிதமான சூட்டில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். இப்படி செய்வதால் கச்சோரி நல்ல மொறுமொறுப்பாக இருக்கும்.
 12. நன்றாக ஆறியதும் காற்றுபுகாத டப்பாவில் வைத்து 2 நாள் வரை பயன்படுத்தலாம்
 13. கெட்சப் அல்லது இனிப்பு சட்னியடன் பரிமாற சுவையாக இருக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்