வீடு / சமையல் குறிப்பு / பஞ்சாபி கடி

Photo of Punjabi kadhi by saranya sathish at BetterButter
505
0
0.0(0)
0

பஞ்சாபி கடி

Jul-13-2018
saranya sathish
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பஞ்சாபி கடி செய்முறை பற்றி

பஞ்சாபி கடி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பக்கோடா செய்ய தேவையான பொருட்கள்
  2. கடலை மாவு அரை கப்
  3. பொடியாக நறுக்கிய வெங்காயம் அரை கப்
  4. நறுக்கிய பச்சை மிளகாய் ஒன்று
  5. எண்ணெய் பொரிக்க தேவையான அளவு
  6. உப்பு தேவையான அளவு
  7. கடி செய்ய தேவையான பொருட்கள்
  8. புளித்த தயிர் ஒரு கப்
  9. கடலை மாவு கால் கப்
  10. தண்ணீர் ஒன்றரை கப்
  11. மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்
  12. உப்பு தேவையான அளவு
  13. தாளிக்க தேவையான பொருட்கள்
  14. கடுகு கால் டீஸ்பூன்
  15. வெந்தயம் கால் டீஸ்பூன்
  16. சீரகம் கால் டீஸ்பூன்
  17. எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்
  18. வரமிளகாய்-2
  19. மிளகாய் தூள் அரை டீஸ்பூன்
  20. துருவிய இஞ்சி அரை டீஸ்பூன்
  21. கருவேப்பிலை கொத்தமல்லி சிறிது

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் கடலை மாவு நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
  2. பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
  3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து நன்றாக சுடு செய்யவும்.
  4. எண்ணெய் நன்றாக சூடானதும் கரைத்த மாவை சிறுசிறு பக்கோடாகளாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
  5. ஒரு பாத்திரத்தில் கடலை மாவு தயிர் சேர்த்து நன்றாக கட்டி இல்லாமல் கரைத்துக் கொள்ளவும்.
  6. பின்னர் தண்ணீர் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
  7. ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு வெந்தயம் சீரகம் சேர்த்து தாளிக்கவும்.
  8. பின்னர் துருவிய இஞ்சி சேர்த்து பத்து நிமிடம் நன்றாக வதக்கவும்.
  9. பின்னர் கரைத்து வைத்திருக்கும் மாவை சேர்த்து மிதமான தீயில் 10 நிமிடம் சமைக்கவும்.
  10. கலவை சற்று கெட்டியாக இருந்தால் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்.
  11. ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
  12. எண்ணெய் சூடானதும் அடுப்பை நிறுத்தி வர மிளகாய் மிளகாய்த்தூள் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  13. பின் இந்த கலவை கொதித்து கொண்டிருக்கும் மாவு கலவையில் சேர்த்து கலந்து கொள்ளவும்.
  14. பின்னர் பொரித்து வைத்த பக்கோடாகளை சேர்த்து நன்றாக கலந்து 5 நிமிடம் கொதிக்க வைத்து பின் கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்