வீடு / சமையல் குறிப்பு / கருப்பு உளுந்து பூரண கொழுக்கட்டை

Photo of Black gram pooran kozhukattai by Krishnasamy Vidya Valli at BetterButter
441
0
0.0(0)
0

கருப்பு உளுந்து பூரண கொழுக்கட்டை

Jul-13-2018
Krishnasamy Vidya Valli
45 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

கருப்பு உளுந்து பூரண கொழுக்கட்டை செய்முறை பற்றி

கருப்பு உளுந்து உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. அதையும் அரிசிமாவையும் சேர்த்து செய்யும் கொழுக்கட்டை வெரைட்டி இது. ஒருவருக்கு இரண்டு வீதம் ஆறு நபர்களுக்கு கொடுக்கலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஸ்டிர் ஃபிரை
  • ஸ்டீமிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. அரிசி மாவு ஒரு கப்
  2. உப்பு இரண்டு சிட்டிகை
  3. தேங்காய் எண்ணெய் ஒரு தேக்கரண்டி
  4. பூரணத்துக்கு தேவையானவை
  5. கருப்பு உளுந்து அரை கப்
  6. பச்சை மிளகாய், மிளகாய் வற்றல் தலா 1
  7. உப்பு கால் தேக்கரண்டி
  8. பெருங்காயம் 2 சிட்டிகை
  9. தாளிக்க தேவையானவை
  10. தேங்காய் எண்ணெய் ஒரு தேக்கரண்டி
  11. கடுகு உளுத்தம்பருப்பு தலா அரை தேக்கரண்டி
  12. கருவேப்பிலை ஒரு ஆர்க்கு

வழிமுறைகள்

  1. அரிசி மாவை கொதிக்கும் ஒன்றரை கப் வெந்நீர் , எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து கொழுக்கட்டை மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்
  2. கருப்பு உளுந்தை 30 முதல் 40 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும்
  3. தோலியை களையாமல் பச்சை மிளகாய் மிளகாய் வற்றல் பெருங்காயம் உப்பு சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்
  4. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றைத் தாளித்து அரைத்த விழுது சேர்த்து வதக்கவும்
  5. கை பொறுக்கும் சூட்டில் சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்
  6. ஏற்கனவே கிளறி வைத்த அரிசி மாவில் இந்த உருண்டையை பூரணமாக வைத்து கொழுக்கட்டையாக பிடித்து ஆவியில் ஐந்து முதல் பத்து நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்
  7. காரசாரமான கருப்பு உளுந்து பூரண கொழுக்கட்டை தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்