Photo of Kuzhalappam by Sowmya Sundar at BetterButter
385
2
0.0(0)
0

குழலப்பம்

Jul-14-2018
Sowmya Sundar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

குழலப்பம் செய்முறை பற்றி

கேரளாவில் பிரபலமான கிரிஸ்பி ஸ்னாக்ஸ் வெரைட்டி இது.அரிசி மாவு மற்றும் உளுந்துமாவு கலந்து குழல் போன்று சுருட்டி செய்வதால் இந்த பெயர்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • கேரளா
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அரிசி மாவு-1 கப்
  2. உளுந்து -3 டேபிள் ஸ்பூன்
  3. உப்பு தேவையான அளவு
  4. கருப்பு எள் -1 டீஸ்பூன்
  5. எண்ணெய் பொரிக்க
  6. அரைக்க
  7. தேங்காய் துருவல்-3 டேபிள் ஸ்பூன்
  8. சின்ன வெங்காயம்-2
  9. பூண்டு-2 பல்
  10. சீரகம்-1 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. மிக்ஸியில் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நைசாக அரைக்கவும்
  2. உளுந்தை வெறும் வாணலியில் லேசாக வறுத்து பொடித்து சலித்து கொள்ளவும்
  3. பாத்திரத்தில் அரிசி மாவு,உளுந்து மாவு, உப்பு, எள் மற்றும் அரைத்த விழுதை சேர்த்து கொள்ளவும்
  4. சிறிது வெந்நீர் விட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும்(கால் கப் தண்ணீர் வரை தேவைப்படும்)
  5. பத்து நிமிடம் கழித்து மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஒரு ப்ளாஸ்டிக் ஷீட்டில் வட்டமாக தட்டி கொள்ளவும்
  6. பின்பு அதை ஆள்காட்டி விரலை நடுவில் வைத்து குழல் போல சுருட்டி கொள்ளவும். இதே போல அனைத்தும் செய்து கொள்ளவும்
  7. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் குழல்களை இரண்டிரண்டாக போட்டு மிதமான தீயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  8. ஆறியதும் காற்று புகாத டப்பாவில் போட்டு பத்து நாட்கள் வரை பயன்படுத்தி கொள்ளலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்