வீடு / சமையல் குறிப்பு / வேகவைத்த சமோசா

Photo of Steamed samosa by Krishnasamy Vidya Valli at BetterButter
620
1
0.0(0)
0

வேகவைத்த சமோசா

Jul-15-2018
Krishnasamy Vidya Valli
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

வேகவைத்த சமோசா செய்முறை பற்றி

சமோசா என்றால் எண்ணெயில்தான் பொரிக்க வேண்டுமா? வேகவைத்தும் செய்யலாம். மைதாவிற்கு பதில் அரிசி மாவு/கோதுமை மாவு பயன்படுத்தலாம். ஒருவருக்கு இரண்டு வீதம் ஐந்து நபர்களுக்கு கொடுக்கலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • ஃப்யூஷன்
  • ஸ்டிர் ஃபிரை
  • ஸ்டீமிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. அரிசி மாவு ஒரு கப்
  2. உப்பு அரை தேக்கரண்டி
  3. ஸ்டஃபிங்கிற்கு தேவையானது
  4. வெங்காயம் ஒன்று
  5. உருளைக்கிழங்கு ஒன்று
  6. குடைமிளகாய் ஒன்று
  7. கேரட் ஒன்று
  8. தக்காளி -1
  9. பச்ச பட்டாணி 2 மேசைக்கரண்டி
  10. உப்பு ஒரு தேக்கரண்டி
  11. மஞ்சள் பொடி கால் தேக்கரண்டி
  12. காரப்பொடி ஒரு தேக்கரண்டி
  13. கரம் மசாலா கால் தேக்கரண்டி
  14. ஆம்சூர் பவுடர் கால் தேக்கரண்டி
  15. கசூரி மேத்தி ஒரு தேக்கரண்டி
  16. தனியா பொடி சீரகப் பொடி தலா அரை தேக்கரண்டி
  17. கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கியது 2 தேக்கரண்டி
  18. கான்பிளவர்/கடலைமாவு -3 தேக்கரண்டி
  19. தாளிக்க தேவையானவை
  20. எண்ணெய் ஒரு தேக்கரண்டி
  21. கடுகு உளுத்தம் பருப்பு தலா ஒரு தேக்கரண்டி
  22. பெருங்காயம் கால் தேக்கரண்டி
  23. கருவேப்பிலை இரண்டு ஆர்க்கு
  24. சீரகம் அரை தேக்கரண்டி
  25. இஞ்சி பூண்டு விழுது ஒரு தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. அரிசி மாவில் கொதிக்கும் வெந்நீர் மற்றும் உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்
  2. காய்களைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  3. கேரட் உருளைக்கிழங்கு பட்டாணியை ஐந்து நிமிடங்கள் மைக்ரோ வேவ் அவனில் வேகவைத்து எடுக்கவும்
  4. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  5. மற்ற காய்கள் சேர்த்து வதக்கவும்
  6. வேகவைத்த காய்கள் சேர்த்து வதக்கவும்
  7. உப்பு கான்பிளவர்/கடலை மாவு மற்றும் எல்லா பொடிகளும் சேர்த்துக் கிளறவும்
  8. கொத்தமல்லி இலை கசூரி மேத்தி சேர்த்து கிளறி இறக்கவும்
  9. ஏற்கனவே பிசைந்து வைத்ததை சப்பாத்தியாக இட்டு கொள்ளவும்
  10. நடுவில் செய்து வைத்த மசாலாவை வைத்து ஓரங்களை போர்க் உதவியால் ஒட்டிக் கொள்ளவும்
  11. இதை போல் எல்லா சமோசா களையும் செய்து கொள்ளவும்
  12. ஆவியில் 5 முதல் 10 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்
  13. சிறிது ஆற வைத்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்