வீடு / சமையல் குறிப்பு / சாக்லேட் கிறோய்ஸ்சண்ட் ரோல்ஸ்

Photo of Choclate croissant rolls by Adaikkammai Annamalai at BetterButter
484
3
0.0(0)
0

சாக்லேட் கிறோய்ஸ்சண்ட் ரோல்ஸ்

Jul-15-2018
Adaikkammai Annamalai
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சாக்லேட் கிறோய்ஸ்சண்ட் ரோல்ஸ் செய்முறை பற்றி

இது ஒரு பிரெஞ்ச் உணவு ,, இது முழுக்க பட்டர் , ஈஸ்ட், பால், மைதா கொள்ளது தயாரிக்க படுகிறது,, இது மிகவும் ருசியாகவும் ,, உப்பியும் இருக்க கூடிய இனிப்பு பண், கிறேசென்ட (crescent),, அதன் பெயரிலிருந்து பிரெஞ்சு மொழியில், அதாவது "சந்திரன்" என்பதாகும். கிப்ஃபெல் என அழைக்கப்படும் ஆஸ்திரிய பேஸ்ட்ரி 1830 களின் முற்பகுதியில் உள்ளது, ஆஸ்திரிய பாரிசில் வியன்னாஸ் பேக்கரி ஒன்றை திறந்தது, இது கிப்ஃபெரியின் மிகவும் பிரபலமான மற்றும் பிரியமான பிரெஞ்சு பதிப்புகளாக மாறியது, இறுதியில் கிறோய்ஸ்சண்ட் (croissant) என பெயரிடப்பட்டது. இது வீட்டிலே செய்ய கூடிய ஒரு ரெசிபி ,, இப்பொழுது உங்களுக்காக எளிய வடிவில்

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • ஃபிரெஞ்ச்
  • மைக்ரோவேவிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மைதா - 2 கப்
  2. கோதுமை - 1 கப்
  3. ஈஸ்ட் - 1 tsp
  4. சர்க்கரை - 5 tsp
  5. உப்பு - சிறிது
  6. பால் - 1/2 கப்
  7. வெதுவான தண்ணீர் - 1/2 கப்
  8. உருகிய பட்டர் - 25 gm
  9. சகோ சிப் - உள்ளதே ஸ்டூஃப் செய்ய/ உங்களுக்கு பிடித்தது

வழிமுறைகள்

  1. முதலில் தேவையான பொருடகளை எடுத்து கொள்ளவும்
  2. பின் சூடு தண்ணீர் 1/2 கப் எடுத்து அதில் ஈஸ்ட் - 2 tsp, சர்க்கரை - சிறிது சேர்த்து நன்றாக அடித்து தேக்கரண்டியை வைத்து கரைக்கவும்
  3. கரைத்ததை ஓரமாக வைக்கவும் சில நிமிடம்
  4. பின் அகல பௌளை எடுத்து மைதா - 2 கப் , சர்க்கரை- 5 tsp, உப்பு - சிறிது சேர்த்து கலந்து கொள்ளவும்
  5. பின் அதனுடன் உருகிய பட்டர் - 50gm சேர்த்து பிசையவும்
  6. பிசைந்த பின் கலக்கி வைத்திருக்கும் ஈஸ்ட் தண்ணீரை இதனுடன் சேர்க்கவும்
  7. இதனுடன் பால் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்றாக பிசையவும்
  8. பின் சப்பாத்தி மாவு போல் நன்கு மெதுவாக பிசைந்து எடுத்து கொள்ளவும்
  9. பிறகு அதை துணி அல்லது பிளாஸ்டிக் வ்ராப் போட்டு மூடி வைக்கவும் 1 மணி நேரம்
  10. 1 மணி நேரம் கழித்து எடுத்தால் உப்பியிருக்கும் அதில் நடுவில் கையை மடித்து அமுக்கவும் இது போல்
  11. பின் அதில் உள்ள முழு மாவையும் எடுத்து சப்பாத்தி மாவு போல் பெரிய பாய் போல நீட்டமாக அகலமாக தேய்த்து கொள்ளவும் பெரிய கட்டையை வைத்து தேய்க்கவும்
  12. பின் அதை கத்தி அல்லது கட்டெரை வைத்து நீளமாக முக்கோண வடிவில் கட் செய்யவும் இதே போல்
  13. பின் அதில் அகலமான கீழ் பகுதியில் நடுவில் வெட்டவும் சிறிதாக மேலே போல் இரண்டாக பிரிப்பது போல் பிரித்து வெட்டியதற்கு கொஞ்சம் மேலே உங்களுக்கு பிடித்த சாக்லேட் அல்லது வேறு ஸ்டஃப் வைக்கவும்
  14. ஸ்டஃப் வைத்த பின் கீழே வெட்டிய பகுதியில் இரண்டாக பிரித்து அப்படியே மேல் நோக்கி சுற்றவும்
  15. இதே போல்
  16. மீதம் உள்ள மாவையும் அதே போல் செய்து பின் அதை பேக்கிங் ப்ளேட்டில் அடுக்கவும்
  17. ஒரு முட்டையை நன்றாக கலக்கி எடுத்து அதை ரோல் மேல் எஃகு வாஷ் செய்யவும் இதே போல்
  18. பிறகு ஓவனை ப்ரீஹீட் செய்து 250℃ டிகிரியில் 20 - 25 min பேக் செய்யவும்
  19. 20 - 25 நிமிடம் கழித்து பார்க்கவும் நன்றாக பொன்னிறமாக வெந்த பின் எடுத்து ஆற வைக்கவும்
  20. சுவையான சாக்லேட் கிறோய்ஸ்சண்ட் ரோல்ஸ் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்