Photo of Easy vadacurry by Revathi Reva at BetterButter
540
0
0.0(0)
0

ஈசி வடகறி

Jul-15-2018
Revathi Reva
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஈசி வடகறி செய்முறை பற்றி

ஊற வைக்க நேரம் இல்லாத போது அவசரத்திற்கு கைகொடுக்கும்

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பட்டாணிபருப்பு மாவு 1 கப்
  2. கடலைமாவு 1கப்
  3. வெங்காயம் 2
  4. தக்காளி 1
  5. பச்சைமிளகாய் 2
  6. மிளகாய்தூள் 1ஸ்பூன்
  7. பட்டை, லவங்கம், ஏலக்காய் தலா 3
  8. கரம் மசாலா 1ஸ்பூன்
  9. எண்ணெய்
  10. உப்பு

வழிமுறைகள்

  1. மாவு இரண்டையும் ஒன்றாக கலக்கவும். அதில் உப்பு, மிளகாய்தூள், சோம்பு சேர்த்து தண்ணீர் தெளித்து சிறு சிறு பக்கோடாவாக சுட்டு எடுக்கவும்.
  2. பக்கோடாவை உதிர்த்து தண்ணீரில் ஊறவைக்கவும். இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய், பட்டை லவங்கம் தலா ஒன்று கருவேப்பிலை சேர்த்து அரைக்கவும்
  3. கடாயில் எண்ணெய் விட்டு சோம்பு பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கி, இஞ்சிபூண்டு அரைத்த விழுது, தக்காளி வதக்கி தூள் வகைகள் சேர்த்து வதக்கவும்
  4. ஊற வைத்த பக்கோடவை தண்ணீருடன் ஊற்றி வேக விடவும். கொதித்து சேர்ந்து வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும்
  5. எளிமையான அவசரத்திற்கு உதவும் வடகறி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்