வீடு / சமையல் குறிப்பு / மட்டன் கீமா பீஸ் சமோசா

Photo of Mutton keema peas samosa by shyamala devi at BetterButter
1656
0
0.0(0)
0

மட்டன் கீமா பீஸ் சமோசா

Jul-15-2018
shyamala devi
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
90 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

மட்டன் கீமா பீஸ் சமோசா செய்முறை பற்றி

மட்டன் கீமா பட்டாணியை சேர்த்து செய்த சமோசா

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. மைதா 250 கிராம்
  2. ரவை 2 ஸ்பூன்
  3. மட்டன் கீமா 250 கிராம்
  4. பச்சை பட்டாணி 150 gram
  5. வெங்காயம் 2
  6. இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 ஸ்பூன்
  7. தக்காளி 1
  8. கரம் மசாலா தூள் 1 ஸ்பூன்
  9. சீரகம் தேவையான அளவு
  10. மிளகாய்த் தூள் 1 ஸ்பூன்
  11. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  12. உப்பு தேவையான அளவு
  13. எண்ணெய் பொரிப்பதற்கு+வதக்குவதற்கு

வழிமுறைகள்

  1. மைதா, ரவை உப்பு சேர்த்து கலந்து ,தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ள வேண்டும்.மாவை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்
  2. மட்டன் கீமாவை இரண்டு விசில் விட்டு வேக வைக்கவும்
  3. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்த வுடன் சீரகம் சேர்த்து பொரிந்த வுடன்,வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.வெங்காயம் வதங்கியவுடன்,இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும்.பின் தக்காளி சேர்த்து வதங்கியவுடன்,மட்டன் சேர்த்து வதக்க வேண்டும்.மட்டன் வதங்கியவுடன் ,பட்டாணி சேர்த்து வதக்க வேண்டும்.பின் மிளகாய்த் தூள்,கரம் மசாலா தூள்,மஞ்சள் தூள் ,உப்பு சேர்த்து மசாலாவை வதக்க வேண்டும்.கொத்தமல்லி சேர்த்து இறக்க வேண்டும்
  4. மைதா மாவை எடுத்து உருண்டை களாக உருட்டி,சப்பாத்தி போல் தேய்க்க வேண்டும்
  5. சப்பாத்தியை இரண்டாக கட் செய்து,மாவை சுற்றி அதில் மசாலா வைத்து, மைதா பேஸ்ட் கொண்டு சமோசாவின் ஓரங்களை மூட வேண்டும்
  6. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் ,சமோசாக்களை பொரித்தெடுக்க வேண்டும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்