Photo of kalakala by shadiqah hasana at BetterButter
334
1
0.0(0)
0

கலகலா

Jul-16-2018
shadiqah hasana
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

கலகலா செய்முறை பற்றி

எங்களூரின் பாரம்பரயமிக்க நொறுக்குத்தீனி.இதை இனிப்பிலும் காரத்திலும் செய்வார்கள்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. மைதா 300 கிராம்
  2. ஜீரகம் 1 டேபிள் ஸ்பூன்
  3. எள் 1 டேபிள் ஸ்பூன்
  4. நெய் 1 டேபிள் ஸ்பூன்
  5. முட்டை 1
  6. தேங்காய்ப்பால்-1 கப்
  7. சமையல் சோடா 1 பின்ச்
  8. மிளகாய்த்தூள் 1 டீஸ்பூன்
  9. உப்பு சுவைக்கேற்ப
  10. எண்ணெய் பொரிக்கத்தேவைநான அளவு

வழிமுறைகள்

  1. மைதா உப்பு சமையல் சோடா மிளகாய்த்தூள் அனைத்தையும் சல்லடையால் சலித்துக்கொள்ளவும்
  2. மிக்சிங் பவ்லில் முட்டை நெய் சேர்த்து நன்கு அடித்துக்கொள்ளவும்
  3. இதில் சலித்த மைதாவை சேர்த்து பிசிறிக்கொள்ளவும்
  4. சீரகம் எள் சேர்த்து வெதுவெதுப்பான பால் சேர்த்து கெட்டியாக பிசைந்நு அரை மணி நேரம் ஊற வைக்கவும்
  5. இந்த மாவை நான்காக பிரித்து உருண்டைகளாக்கவும்
  6. சப்பாத்தி குழவியால் மிகவும் மெல்லியதாக இல்லாமல் வட்டமாக சப்பாத்தி இடவும்
  7. இதனை இரண்டு இஞ்ச் நீள அகலத்திற்கு டைமண்ட் ஷேப்பில் கத்தியால் வெட்டவும்
  8. வாணலியில் எண்ணைய் காய விட்டு மிதமான தீயில் மொறுமொறுப்பாகும் வரை பொரித்தெடுக்கவும்
  9. உப்பு மிளகாய்தூள் கலந்து காற்றுப்புகாத கன்டெய்னரில் சேமிக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்