வீடு / சமையல் குறிப்பு / மங்கானி கூல்

Photo of Mangani kool by Mughal Kitchen at BetterButter
551
1
0.0(0)
0

மங்கானி கூல்

Jul-16-2018
Mughal Kitchen
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

மங்கானி கூல் செய்முறை பற்றி

மணப்பெண்ணிற்கு நலங்கு வைக்கும் சமயத்தில் இந்த மங்கானிகூல் செய்வது எங்கள் ஊர் வழக்கம்

செய்முறை டாக்ஸ்

  • ஸ்ரீலங்கன்
  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • பாய்ளிங்
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. இடியாப்ப மாவை வறுத்து சலித்த போது வரும் கப்பி ஒரு கப்
  2. அல்லது பச்சரிசி மாவை சிவக்க வறுத்து பயன்படுத்தவும்
  3. கருப்பட்டி 300 கிராம்
  4. நெய் 100 கிராம்
  5. பிஸ்தா முந்திரி கிஸ்மிஸ் சிறிது
  6. ஏலக்காய் 4
  7. சிறிய துண்டு பட்டை
  8. தேங்காய் ஒன்று பால் எடுத்துக் கொள்ளவும்

வழிமுறைகள்

  1. மாவை எடுத்து வைக்கவும்
  2. தேங்காய் பால் எடுத்துக் கொள்ளவும்
  3. வறுக்க தேவையானவை
  4. ஒரு வாணலியில் நெய்யை ஊற்றி கிஸ்மிஸ் முந்திரி பிஸ்தா பட்டை ஏலக்காய் போட்டு வறுத்துக் கொள்ளவும்
  5. கருப்பட்டி தட்டி நீர் விட்டு காய்ச்சி வடிகட்டி கொள்ளவும்
  6. அடுப்பில் வாணலியை வைத்து வடிகட்டிய கருப்பட்டி பால் சேர்க்கவும்.அதில் அரைலிட்டர் நீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்
  7. கொதி வந்தபின் மாவை சேர்க்கவும்.சிறிது உப்பு சேர்க்கவும்
  8. மாவை ஐந்து நிமிடம் வேக வைக்கவும்
  9. பின் தேங்காய்ப்பால் சேர்க்கவும்
  10. நன்கு கலந்து விடவும்
  11. பின் நெய்யில் வறுத்தவற்றை சேர்க்கவும்
  12. மங்கானி கூல் ரெடி
  13. திருநெல்வேலி மேலப்பாளையம் கடையநல்லூர் கடைகளில் தக்கடி மாவு என கேட்டால் கிடைக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்