வீடு / சமையல் குறிப்பு / ரோஸ் மாதிரி

Photo of Rose Mathiri by Jayasakthi Ekambaram at BetterButter
153
2
0.0(0)
0

ரோஸ் மாதிரி

Jul-16-2018
Jayasakthi Ekambaram
40 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ரோஸ் மாதிரி செய்முறை பற்றி

மைதா மாவு வைத்து செய்யும் ஒரு ஸ்நாக்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • நார்த் இந்தியன்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மைதா மாவு 200 கிராம்
  2. எண்ணெய் 1/2 லிட்டர்
  3. ஓமம் ஒரு ஸ்பூன்
  4. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. மைதா மாவில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு ஓமம் சேர்த்து தேவையான உப்பு சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்
  2. இந்த மாவை ஈரத்துணி போட்டு அரை மணி நேரம் மூடி ஊற வைக்கவும்
  3. மாவை இரண்டு பிரிவுகளாகப் பிரித்து ஒரு பகுதியை பெரிய சப்பாத்தியாக மெல்லியதாக இடவும்
  4. அந்த பெரிய சப்பாத்தியை 5 வட்டங்களாக வெட்டிக் கொள்ளவும்
  5. அந்த ஐந்து குட்டி சப்பாத்தியை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கவும்
  6. அதனை இறுக்கமாக நன்றாக சுருட்டிக் கொள்ளவும்
  7. சுருட்டியதை நடுவில் கத்தியால் இரண்டு பாகமாக வெட்டவும்
  8. அதை நேராக நிறுத்தி பார்க்கும்போது அது ரோஜா இதழ்களைப் போன்று இருக்கும்
  9. இந்த ரோஜா வடிவங்களை எண்ணையில் பொரித்து எடுக்கவும்
  10. எண்ணெய் சூடானதும் அடுப்பை மிகவும் குறைந்த தீயில் வைத்து நன்றாக பொன்னிறம் வரும் வரை பொரித்து எடுக்கவும்
  11. கொஞ்சம் சிவக்க வறுக்க வேண்டும் அப்பொழுதுதான் உள்ளேயும் நன்றாக வேகும்
  12. ரோஜா வடிவத்தில் இருப்பதால் குழந்தைகள் இதை விரும்பி சாப்பிடுவார்கள்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்