வீடு / சமையல் குறிப்பு / வெஜ் சோமாஸ்

Photo of Veg somas by Rachell Revathi Samuel at BetterButter
631
2
0.0(0)
0

வெஜ் சோமாஸ்

Jul-16-2018
Rachell Revathi Samuel
35 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வெஜ் சோமாஸ் செய்முறை பற்றி

காய்கறி சேர்த்து செய்யப்படும் சோமாஸ். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கோதுமை மாவு 1/3 கப்
  2. மைதா 1/3 கப்
  3. உப்பு தேவையான அளவு
  4. எண்ணெய் பொரிக்க்
  5. உள்ளே வைக்க தேவையான பொருட்கள்
  6. காரட் 1
  7. உருளைக்கிழங்கு 1
  8. பெரிய வெங்காயம் 1
  9. மிளகாய்த்தூள் 1ஸ்பூன்
  10. சீரகத்தூள் 1ஸ்பூன்
  11. கரம் மசாலா 1ஸ்பூன்
  12. கொத்தமல்லி இலை சிறிது
  13. கருவேப்பிலை சிறிது

வழிமுறைகள்

  1. கோதுமை மாவு, மைதா, உப்பு , எண்ணெய் 1 ஸ்பூன் மற்றும் தண்ணீர் சேர்த்து பூரி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
  2. பிசைந்த மாவை எண்ணெய் தடவி 20 நிமிடங்கள் மூடி வைக்கவும்
  3. காரட், உருளைக்கிழங்கு சிறிது சிறிதாக துருவிக் கொள்ளவும்
  4. அடுப்பில் வாணலியை வைத்து 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி துருவின காய்கறிகள் சேர்த்து 2,3 நிமிடங்கள் வதக்கி உப்பு மற்றும் பொடி வகைகள் சேர்த்து நன்றாக வதக்கி இறக்கவும்.
  5. இதனுடன் நறுக்கிய வெங்காயம், கருவேப்பிலை கொத்தமல்லி தழை சேர்த்து நன்றாக கிளறவும்.
  6. 20 நிமிடங்களுக்கு பிறகு மாவை சிறு உருண்டைகளாக உருட்டி பூரி கட்டையில் மெல்லியதாக தேய்த்துக் கொள்ளவும்.அதில்செவ்வக வடிவில் வெட்டிக் கொள்ளவும் ( சமோசா ஷீட் (samosa sheet) செய்வதற்கு)
  7. செவ்வக வடிவில் வெட்டிக் கொண்ட சமோசா ஷீட்களை தோசைக் கல்லில் 2 புறமும் 2 நிமிடங்கள் போட்டு எடுக்கவும்.
  8. ஒரு பாத்திரத்தில் சிறிது மைதா மற்றும் தண்ணீர் சேர்த்து பசை போன்று செய்து கொள்ளவும்
  9. சமோசா ஷீட்டில் மைதா பசை தடவி காய்கறி கலவை சிறிது உள்ளே வைத்து சோமாஸ் போன்று ஒட்டவும்
  10. எண்ணெயில் பொரிக்க தயாரான சோமாஸ்
  11. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சோமாஸ் போட்டு பொன்னிறமாக பொரித்து வெளிவரும்.
  12. சுவையான வெஜ் சோமாஸ் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்