வீடு / சமையல் குறிப்பு / மூலிகை கோதுமை தோசை

Photo of Herbal wheat dosa by Nancy Samson at BetterButter
357
0
0.0(0)
0

மூலிகை கோதுமை தோசை

Jul-17-2018
Nancy Samson
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மூலிகை கோதுமை தோசை செய்முறை பற்றி

இது ஆறு இலைகள் சேர்த்து கார சாரமான உடனடி தோசை. குளிர் காலங்களில், ஜலதோஷம் பிடித்தால் சாப்பிட உகந்தது. உடலுக்கு ஆரோக்கியமானது. ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்தது.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோதுமை மாவு 1 கப்
  2. கோதுமை குருணை 1/4 கப்
  3. தேங்காய் துருவல் 1 மேசைக்கரண்டி
  4. ஓமவல்லி இலை 2
  5. முருங்கை இலை பொடி 1 தேக்கரண்டி
  6. துளசி 5 அல்லது 6 இலைகள்
  7. கறிவேப்பிலை 3 அல்லது 4 இலைகள்
  8. கொத்தமல்லி, புதினா - 1/2 கையளவு
  9. இஞ்சி 1/2 இன்ச் துண்டு
  10. பச்சை மிளகாய் 1
  11. கடுகு - 1/4 தேக்கரண்டி
  12. சீரகம் - 1/4 தேக்கரண்டி
  13. பெருங்காயம் 1 சிட்டிகை
  14. உப்பு தேவையான அளவு
  15. எண்ணெய் 1/4 கப்

வழிமுறைகள்

  1. முதலில் கொடுக்கப்பட்டுள்ள இலைகளை கழுவி நீர் வடித்து எடுத்து வையுங்கள்.
  2. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, கழுவிய இலைகளை சேர்த்து வதக்கவும்.
  3. இலைகள் சுருங்கியதும், அடுப்பை அணைத்து, ஆறவிடவும்.
  4. இலைகள் ஆறியதும், ஒரு மிக்ஸியில் இஞ்சி, பச்சை மிளகாய், இலைகள், 1/4 தேக்கரண்டி புளி பேஸ்ட், 1 மேசைக்கரண்டி துருவிய தேங்காய், தேவையான உப்பு சேர்த்து விழுதாக அரைக்கவும்.
  5. அரைத்த விழுதில், கடுகு, சீரகம் தாளித்து கொட்டி கலந்துகொள்ளவும்.
  6. இப்போது ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, கோதுமை குருணை, முருங்கை பொடி, பெருங்காய பொடி சேர்த்து தேவையான நீர் விட்டு கட்டி இல்லாமல் கரைத்துக் கொள்ளுங்கள்.
  7. இத்துடன் அரைத்து தாளித்த விழுதை சேர்த்து நன்றாக தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளுங்கள்.
  8. ஒரு தவாவில் எண்ணெய் தேய்த்து , சூடாக்கி தோசைகள் வார்த்து எடுக்கவும்.
  9. சுவையும், ஆரோக்கியமும் நிறைந்தது.
  10. முருங்கை பொடி தயாரிக்க, முருங்கை இலைகளை உருவி கழுவி, நீர் வடித்து, வெயிலில் ஒரு தட்டில் பரப்பி முருகலாக காயவைக்கவும்.
  11. காய்ந்த இலைகளை உடனே மிக்ஸியில் போட்டு தூளாக்கி வைத்து கொள்ளுங்கள்.
  12. பல்வேறு பத்தார்த்தங்களில், கொஞ்சமாக சேர்த்து கொடுக்கலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்