வீடு / சமையல் குறிப்பு / கடலைமாவு பர்பி

Photo of Besan flour burfi by Krishnasamy Vidya Valli at BetterButter
537
0
0.0(0)
0

கடலைமாவு பர்பி

Jul-17-2018
Krishnasamy Vidya Valli
1 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

கடலைமாவு பர்பி செய்முறை பற்றி

மைசூர் பாகின் தங்கச்சி இது. மைசூர் பாகிற்கு நெய் சீனி இரண்டுமே கூடுதல் தேவைப்படும். ஆனால் பர்பிக்கு அவ்வளவு தேவையில்லை. ஒருவருக்கு 2 வீதம் ஆறு நபர்களுக்கு கொடுக்கலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஸ்டிர் ஃபிரை
  • பாய்ளிங்
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. கடலைமாவு 1 கப்
  2. சீனி -11/4 கப்
  3. நெய் 1 கப்
  4. ஏலப்பொடி -1/4 தேக்கரண்டி
  5. பாதாம் முந்திரி தலா 5

வழிமுறைகள்

  1. பாதியளவு நெய்விட்டு கடலைமாவை பச்ச வாசனை போகும் வரை வறுக்கவும்
  2. அதே நேரத்தில் மற்றொரு கடாயில் சிறிது தண்ணீர் சேர்த்து சீனியை கரைய விடவும்
  3. ஒரு கம்பி பதம் வந்தவுடன் அப்படியே கடலைமாவில் சேர்க்கவும்
  4. மீதமுள்ள நெய் ஏலப்பொடி சேர்த்து சுருளகிளறவும்
  5. ஒரு டிரேயில் நெய் தடவி கிளறிய கலவையை விடவும்
  6. பாதாம் முந்திரி யை பொடியாக நறுக்கி மேலே தூவவும்
  7. இளஞ்சூட்டோடு கட்டி போட்டு பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்